Bigg Boss Tamil 7 | Day 45 | Review | ‘ஒருவர் தன் சுயமரியாதையை இழந்து தான் இந்த பிக்பாஸ்சில் இருக்க வேண்டி உள்ளதா?’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், நாற்பத்து ஐந்தாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: விசித்ரா ஜோவிகாவை பற்றி – உன்னைப் போல் ஒருவன் டாஸ்க் – சீக்ரெட் டாஸ்க் – சோலோ பெர்பாமன்ஸ் – விசித்ராவின் உணர்வு பூர்வமான தருணம்
ஒரு தடவ கேப்டன்சிப் டாஸ்க்ல ஐஷூ ஜெயிக்கனும் அப்படிங்கிறதுக்காக மாயா, விஷ்ணு, பூர்ணிமா எல்லாரும் ஒன்னு சேர்ந்து ஜோவிகாவ தோற்கடிப்பாங்க, அந்த டைமும் ஜோவிகா ரொம்ப உடைஞ்சு போய் அழுதிட்டு இருந்தாங்க. ஆனா இன்னிக்கு அதே கேங் கூட, கேங் பண்ணி சுத்திட்டு திரியுறாங்க, இங்க ஜோவிகா தன்னுடைய எதிரி எல்லாரையும் நட்புகளாக்கிகிடனும்னு நினைக்கிறாங்களா, இல்ல மாயா & கோ ஜோவிகாவா பயன்படுத்திக்கிறாங்களா என்பது புரியாத புதிர் , விசித்ரா ஜோவிகா குறித்து பேசிய ஒவ்வொன்றும் சரி தான் ஆனால் தற்போது அதை ஜோவிகா புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை.
ஒவ்வொரு ஆண்களும் ஒவ்வொரு பெண் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டும். ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொரு ஆண் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டும். மொத்தம் 8 ஆண்களும், 7 பெண்களும் இருப்பதால், 7 பெண்கள் சேர்ந்து தங்களால் ஏற்று நடிக்க முடியாத ஒரு ஆண் கதாபாத்திரத்தை டாஸ்க்கில் இருந்து எலிமினேட் செய்யலாம். அந்த வகையில் அனைவரும் இணைந்து தினேஷ் அவர்களை டாஸ்க்கில் இருந்து எலிமினேட் செய்தனர்.
போட்டியாளர்கள் | இட்ட வேடம் |
விஷ்ணு | மாயா கிருஷ்ணன் |
மணி சந்திரா | பூர்ணிமா |
பிராவோ | ஜோவிகா |
நிக்ஸன் | விசித்ரா |
விக்ரம் | ரவீனா |
கானா பாலா | அக்ஷயா |
கூல் சுரேஷ் | அர்ச்சனா |
ஜோவிகா | நிக்ஸன் |
மாயா கிருஷ்ணன் | விஷ்ணு |
விசித்ரா | கூல் சுரேஷ் |
அர்ச்சனா | விக்ரம் |
பூர்ணிமா | கானா பாலா |
அக்ஷயா | பிராவோ |
ரவீனா | மணி சந்திரா |
ஆண்கள் பெண்கள் வேடமிட்டு, பெண்கள் ஆண்கள் வேடமிட்டு பார்க்கவே Fun ஆக இருந்தது. மாயாவாக விஷ்ணுவும், பூர்ணிமாவாக மணியும், அர்ச்சனாவாக வேடமிட்டு இருந்த கூல் சுரேஷ் அவர்களை வச்சு செய்து கொண்டு இருந்தனர்.
டாஸ்க் நடந்து கொண்டு இருக்கும் போதே தினேஷ் அவர்களை அழைத்து பிக்பாஸ் ஒரு சீக்ரெட் டாஸ்க் கொடுத்தார். அதாவது கேரக்டர்களாக இருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களையும் உடைத்து அவர்களை அந்த கேரக்டர்களில் இருந்து வெளியே வர வைக்க வேண்டும். அது போக சிறப்பாக செயல்படும் போட்டியாளர்களையும் தினேஷ் ஆராய வேண்டும்.
தினேஷ் அவருக்கு கொடுத்த வேலையை அவர் சிறப்பாக செய்தார். ஒட்டு மொத்தமாக போட்டியாளர்களை அவர் ட்ரிகர் செய்ய, வாண்டடாக வந்து சிக்கிக்கொண்டார் விஷ்ணு. கோபத்தில் ஆக்ரோஷத்தில் ஒட்டு மொத்தமாக உடைந்து தனக்கு கொடுக்கப்பட்ட மாயா கேரக்டரை விட்டு வெளியில் வந்து விஷ்ணுவாகவே மாறினார். இது தினேஷ்க்கு சக்ஸஸ். விஷ்ணுவிற்கு க்ளீன் அவுட்.
அடுத்தகட்டமாக ஒவ்வொருவருக்கும் தனியாக ஸ்கோர் செய்ய மேடை வாய்ப்பு கொடுக்கப்பட்டது. விசித்ராவாக நிக்ஸன், ரவீனாவாக விக்ரம், அர்ச்சனவாக கூல் சுரேஷ், நிக்ஸனாக ஜோவிகா உள்ளிட்டோர் சிறப்பாக மேடையை பயன்படுத்தினர். பெண் கதாபாத்திரம் ஏற்று நடித்து சிறப்பாக நடித்தவர்களுள், நிக்ஸன் விசித்ராவாக சிறப்பாக செயல்பட்டதாக அறிவிக்கப்பட்டார். ஆண் கதாபாத்திரம் ஏற்று நடித்து சிறப்பாக செயல்பட்டவர்களுள், ஜோவிகா நிக்ஸனாக சிறப்பாக செயல்பட்டதாக அறிவிக்கப்பட்டார். ஒட்டு மொத்தமாக சிறப்பாக செயல்பட்டதாக கூறி நிக்ஸன் அவர்களுக்கு ஸ்டார் கொடுக்கப்பட்டது. சீக்ரெட் டாஸ்க்கும் போட்டு உடைக்கப்பட்டது.
இங்கு எல்லாரும் என்னை அம்மாவாக பார்க்க வேண்டும், அதை வைத்து விளையாடனும் அப்படிலாம் எனக்கு ஆசை இல்ல, உங்களுக்குள்ள என்னோட 3 பசங்கள நான் பாக்குறேன். போக போக இங்க மரியாதைங்கிறது ரொம்ப குறைஞ்சிக்கிட்டே போகுது. விச்சும்மா, விச்சுன்னு ஆகி இப்ப விசித்ரால வந்து நிக்குது. ஒரு விளையாட்டுக்காக என்னோட சுயமரியாதைய இழக்க நான் விரும்பல. இனிமே எல்லாரும் என்ன விசித்ரா மேடம்னு தான் கூப்பிடனும்.
அப்படி என்னோட சுயமரியாதைய இழந்துட்டு தான் இந்த விளையாடு விளையாடனும்னா இப்பவே மைக்க தூக்கி எறிஞ்சிட்டு போய்கிட்டே இருப்பேன். வெளில எனக்கு ஆயிரம் வேலை பார்த்து என்னால பிழைச்சிக்க முடியும் என விசித்ரா கூறியது கொஞ்சம் எமோசனலாக தான் இருந்தது. ‘அப்ப நீங்களும் இனிமே என்னை மேடம்னு தான் கூப்பிடனும்’ என மாயாவும் பூர்ணிமாவும், விசித்ரா எமோசனலாக பேசிக் கொண்டு இருக்கும் போது வீண்டா விவாதத்தை தூண்டியது அவர்கள் மீது வெறுப்பை தான் வரவழைத்தது.
“ பிக்பாஸ்சில் ஒவ்வொருவரும் தங்களது மதிப்பை உயர்த்திக் கொள்ள தான் உள்நுழைவார்கள், ஆனால் மாயாவும் பூர்ணிமாவும் தங்கள் மதிப்பை தாழ்த்திக் கொள்ள உள்நுழைந்து இருப்பார்கள் போல “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !