Bigg Boss Tamil 7 | Day 51 | Review | ‘நெஞ்சை உருக்கிய இல்லத்தார்களின் கதைகள், உடைந்து நொறுங்கிய விசித்ரா’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், ஐம்பத்து ஒன்றாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: பூர்ணிமா, விசித்ரா, மாயா அவர்களின் ரவீனா பற்றிய கான்வர்சேஷன் – பொரியல் சண்டை – பூகம்பம், டாஸ்க் 1 – பூர்ணிமா, மாயா கான்வர்சேஷன் – வாழ்க்கையின் பூகம்பம் டாஸ்க்
ரவீனாவைப் பொறுத்தவரை வீட்டில் இருக்கும் அனைவரின் குட் புக்ஸ்சிலும் அவர் இருக்கிறார். அது தான் அவரது ஸ்ட்ரேட்டஜியா என்பது புரியவில்லை. ஒட்டு மொத்த இல்லத்தார்களும் முடியை பிடித்து அடித்துக் கொண்டு இருக்கும் போது அவர் இரண்டு பக்கமும் நியாயம் பேசி விட்டு, வீக் எண்டில் அந்த பிரச்சினைகளைப் பற்றி தெளிவாக பேசி ஸ்கோரும் செய்து விடுகிறார் என பூர்ணிமா, ரவீனா பற்றி கூறியது என்னவோ சரியாகவே படுகிறது.
கூல் சுரேஷ் ஒரு பக்கம் பொரியலுக்காக அழுது கொண்டதை பார்க்க முடிந்தது. அவரின் ஏக்கமும் அந்த அழுகையும் பொரியலுக்காக என்று சொல்ல முடியாது, ‘ரவீனா இங்க வாடி பொரியல் எடுத்துக்கோ, நிக்ஸன் வாடா பொரியல் எடுத்துக்கோ, அர்ச்சனா மா இங்க வாமா பொரியல் எடுத்துக்கோ’ என்று ஒலித்த குரல்கள் கூல் சுரேஷ் இங்க வாடா என்று ஒலிக்கவில்லை என்ற ஒரு ஏக்கத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். இன்னொரு பக்கம் சாப்பாட்டுக்கு கூட இங்க சண்ட போட்டு தான் ஆகனுமா என்ற ஆதங்கமாகவும் இருக்கலாம்.
அடுத்தகட்டமாக பூகம்பம் டாஸ்க் 1, ஒரு பந்து ஒரு சரிவான பாதை தளம், ஸ்டார்ட் ஒரு பக்கம் எண்ட் ஒரு பக்கம், பந்தை அப்படியே நகர்த்தி நகர்த்தி எண்ட் வரையிலும் கொண்டு வந்த பேஸ்கட்டில் விழ வைக்க வேண்டும் என்பது டாஸ்க். இதில் பிக்பாஸ் இல்லம் ஜெயிக்க வேண்டும் எனில் 14 பேரில் 10 பேர் டாஸ்க்கை நிறைவு செய்து இருக்க வேண்டும். நிறைவு செய்யாத பட்சத்தில் ஒரு வைல்டு கார்டு கண்டஸ்டண்ட் உறுதி செய்யப்படுவார். எவிக்சனில் மாற்றம் இருக்கலாம்.
அந்த வகையில் முதலில் தினேஷ், விஷ்ணு ஆடினார்கள் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் இருவருமே டாஸ்க்கை முடிக்கவில்லை இரண்டு விக்கெட்டுமே அவுட், இரண்டாவதாக மணி மற்றும் நிக்ஸன் இருவருமே சிறப்பாக விளையாடி கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் டாஸ்க்கை இருவருமே எளிதாக முடித்தனர். அதற்கு பிறகு விக்ரமும், பிராவோவும் மூன்றாவதாக ஆடினார்கள். அதில் விக்ரம் மட்டும் டாஸ்க்கை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்தார். பிராவோவால் டாஸ்க்கை முடிக்க முடியவில்லை.
நான்காவதாக செல்பவர்களை இல்லத்தார்கள் தெரிவு செய்து அனுப்பினர். அர்ச்சனா மற்றும் விசித்ரா, பாசத்துல ஒன்னும் அனுப்பல, தோற்த்தா வச்சு செய்யலாம் அப்படிங்கிற ஒரு கணக்குல தான் இருவரையும் அனுப்பின மாறி இருந்தது. இரண்டுமே பேருமே குறிப்பிட்ட நேரத்திற்குள் டாஸ்க்கை முடிக்கவில்லை. ஒட்டு மொத்தமாக 5 பேர் டாஸ்க்கை விட்டு வெளியேறியபட்சத்தில் பிக்பாஸ் இல்லத்தார்கள் டாஸ்க்கில் தோற்றதாக அறிவிக்கப்பட்டனர். முதல் வைல்டு கார்டு போட்டியாளர்களுக்கான வாய்ப்பு உறுதியானது.
ஆடியன்ஸ் அவர்களின் வீக் எண்ட் நடவடிக்கைகளில் பூர்ணிமா ஒன்றை உணர்ந்து இருக்கிறார். நிறைய ஹேட்டர்களை சம்பாதித்து வைத்து இருக்கிறார் என்பது அவருக்கே தெரிய ஆரம்பித்து இருக்கிறது. இந்த வீட்டில் பூர்ணிமாவின் தவறுகளை சரியாக அவரிடம் முறையிடுபவர் விஷ்ணு மட்டுமே. ஆனாலும் அதை ஏற்றுக் கொள்ள மறுப்பதும், மீண்டும் மீண்டும் அதே தவறை செய்து கொண்டே இருப்பதையும் பூர்ணிமா வாடிக்கையாக வைத்து இருக்கிறார். அப்புறம் எப்படி கைதட்டல் வரும். கடைசி வரைக்கும் வீக் எண் முழுக்க தொண்டைல பிளாக்கோட தான் பூர்ணிமா சுத்தனும் போல.
அடுத்தகட்டமாக வாழ்க்கையின் பூகம்பம் டாஸ்க். தினேஷ் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையேயான பிரிதலை பற்றிக் கூறினார். மிகவும் நேசிக்கும் ஒருவரின் பிரிதலால் அவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களையும், அவர் இன்னமும் அந்த பிரிதலுக்கான காரணத்தையும், மீண்டும் இணைய இருக்கும் வாய்ப்பையும் தேடிக் கொண்டே பயணிப்பதாக கூறிய விதம் அனைவரின் நெஞ்சையும் உடைத்தது. அவர் இந்த பிரச்சினைகளையும் சந்தித்து விட்டு இவ்வளவு தைரியமாக இருப்பது அவரின் மன உறுதியை பிரதிபலிக்கிறது.
அடுத்தகட்டமாக விசித்ரா அவர்கள் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு பெரிய நடிகர் ஒருவரால் இருந்த பாலியல் சீண்டல்களையும், அதனால் அவர் அனுபவித்த வலிகளையும் கண்ணீர் மல்க பேசியது இல்லத்தை மட்டும் அல்ல பிக்பாஸ் ஆடியன்ஸ்களையும் மொத்தமாக உருக்கியது. தவறு செய்தவர்கள் அவர்கள், கேட்கவும் எந்த நாதியும் இல்லை, அதற்கான தண்டனையும் அவர்களுக்கு இல்லை, மாறாக அந்த ஒரு சீண்டல் தன்னுடைய சினிமா வாழ்க்கையை முடக்கி தன்னை வீட்டில் இருக்க வைத்து விட்டது. அவர்களை சுதந்திரமாக திரிய விட்டது என விசித்ரா கூறியது இந்த தேசத்தில் ஆண்களாய் இருக்கும் ஒவ்வொருவரையும் குற்றாவாளிக் கூண்டில் ஏற்றி செருப்படி கொடுத்தது போல இருந்தது.
அடுத்தகட்டமாக, மாயாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட பூகம்பம், உடல் நலம் சரியில்லாத அம்மா, 4 பெண் குழந்தைகள், தொழிற்கல்வி, ஒழுங்காக படிப்பு வரவில்லை, தற்கொலை முடிவு என அனைத்தையும் கடந்து இங்கு வந்து நிற்கும் மாயாவின் உருக்கமான கதையாக அது இருந்தது. எல்லா வலிகளுக்கு பிறகும் வாழ்வில் ஒரு பூ பூக்கும். அந்த தருணத்துக்காக வெயிட் பண்ணிட்டே இருங்க, என மாயா அவரின் கதையை ஒரு பாசிட்டிவ் ஆன அப்ரோச்சில் முடித்து வைத்தது பலருக்கு உந்துதலாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
“ இந்த வாழ்க்கையின் பூகம்பம் டாஸ்க், பிக்பாஸ் இல்லத்தில் பூகம்பம் ஏற்படுத்தியதா என்பது தெரியாது, ஆனால் நிச்சயம் ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு கனமான பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !