Bigg Boss Tamil 7 | Day 52 | Review | ‘மாயாவுக்கு சாஃப்ட் கார்னர், விசித்ரா என்றால் ரஃக்கடு கார்னரா? ’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், ஐம்பத்து இரண்டாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: விசித்ரா பற்றிய தினேஷ் புரிதல் – ஷாப்பிங் ரீபேமெண்ட் டாஸ்க் – தினேஷ் VS விசித்ரா – பூகம்பம் 2 டாஸ்க் – மணி, ரவீனா கான்வர்சேஷன் – பாத்ரூம் க்ளீனிங், ஹவுஸ் கீப்பிங் கண்டஸ்டண்ட்ஸ்
விசித்ரா ‘வாழ்க்கையில் நடந்த பூகம்பம்’ டாஸ்க்கில் அவரது சினிமா வாழ்வில் நடந்த ஒரு சில கசப்பான அனுபவங்களை பகிர்ந்தார். அது பிக்பாஸ் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட டாஸ்க் என்பதனால் மட்டுமே விசித்ரா அங்கு பகிர்ந்தார். மற்றபடி அவர் ஒவ்வொருவரிடம் சென்று கன்டன்டுக்காக சென்று ரிஜிஸ்டர் செய்யவில்லை. ஆனால் தினேஷ் அவர்களோ விசித்ரா அவர் பேசியது பேசுபொருளாக ஆக வேண்டும் என்பதற்காகவே அந்த விடயங்களை இங்கு கொண்டு வந்ததாக மாயாவிடம் சொல்லிக் கொண்டு இருந்தது நிச்சயம் கண்டிக்கத்தக்கது. கன்டன்டுக்காக செய்பவர்கள் இங்கு எத்தனையோ பேர் இருப்பார்கள் அவர்களை சென்று தினேஷ் கண்டித்தால் நன்றாக இருக்கும்.
இது ஒரு ஷாப்பிங் ரீ பேமெண்ட் டாஸ்க், ஒரு நீள கட்டையை தலைக்கு மேல் பிடித்துக் கொண்டு அதன் மறுமுனையில் ஒரு தட்டில் இருக்கும் பந்தையும் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பஸ்சர் அடிக்கும் வரை அப்படியே நின்று விட்டு, பஸ்சர் அடித்த பின் ரேம்பில் அப்படியே நகர்ந்து எல்லைக் கோட்டை அடைய வேண்டும். இவ்வளவு தான் டாஸ்க். டாஸ்க்கில் போட்டியாளர்கள் தோற்கும் பட்சத்தில் வீட்டில் சர்க்கரை அல்லது உப்பு மற்றும் அது சம்மந்தப்பட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் என்பது டாஸ்க். ஆனால் டாஸ்க்கில் பங்கேற்ற ஆறு பேறுமே டாஸ்க்கில் தோற்றனர். அர்ச்சனா மட்டுமே கொஞ்சம் ஆவது தாக்கு பிடித்தார்.
டாஸ்க்கில் தோற்றது தெரிந்ததுமே சர்க்கரை மற்றும் அது சம்மந்தப்பட்ட பொருள்களை பதுக்குவதை ஆரம்பித்தனர். பதுக்கியது பூர்ணிமா, விஷ்ணு, விக்ரம், ஜோவிகா, ஆனால் கேப்டன் தினேஷ் ஒருமையில் திட்டி தீர்த்தது எல்லாம் விசித்ரா அவர்களை தான், காரணம் அவர்கள் பதுக்கிய சர்க்கரை பாக்கெட்டுகளில் எல்லாம் விசித்ராவின் பெயர் இருந்தது. இது ஒரு விதிமீறல்களாக கருதப்பட்டு வீட்டில் கேஸ் ஆஃப் செய்யப்பட்டது. சர்க்கரை பாக்கெட்டுக்கள் எல்லாம் திருப்பிக் கொடுக்கப்பட்டும் கூட கேஸ் ஆன் செய்யப்படவில்லை. காரணம் ஸ்மால் பாஸ் வீட்டார்கள் திருப்பிக் கொடுத்த பிஸ்கட்களை எல்லாம் பிக்பாஸ் வீட்டார்கள் எடுத்து ஒளித்து வைத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். பிறகு தினேஷ் திட்டி தீர்த்ததும் அவர்களும் கேமரா முன்பு மன்னிப்பு கேட்டு, பதுக்கி வைத்த பிஸ்கட்களை ரிட்டன் செய்ததும் கேஸ் மீண்டும் ஆன் செய்யப்பட்டது.
இங்கு தவறு செய்தது ஒரு கும்பல், ஆனால் தினேஷ் திட்டி தீர்த்தது விசித்ரா அவர்களை, நிறைய ஒருமையான வார்த்தைகளை விட்டு விட்டார், ஒரு சாரி கேட்டால் அந்த பிரச்சினை அத்தோடு முடிந்து இருக்கும். ஆனால் தினேஷ் தொடர்ந்து சாரி கேட்க மறுத்தார். அவரது ஈகோவை அவர் விட்டுக் கொடுக்கவில்லை. ‘நான் போய் சாரி கேட்டா, மறுபடியும் மறுபடியும் எனக்கு இப்படியே குடைச்சல் கொடுப்பாங்க, நான் ஏதாச்சு பேசுவேன், அப்புறம் ஒவ்வொரு டைமும் போயிட்டு ஒவ்வொருத்தர்ட்டையும் சாரி கேட்க வேண்டி இருக்கும்’ எனபது தினேஷ் அவர்களின் ஆதங்கமாக இருந்தது. சாரி கேட்க சொல்லி பிரெட் சாபிட்டு விட்டு விசித்ரா உண்ணாவிரதம் இருந்தது எல்லாம் அல்டிமேட்.
பூகம்பம் 2 டாஸ்க், ஒரு முக்கோண வடிவ பந்துகளில் கயிறுகளை நகர்த்தி நகர்த்தி பெரிய பந்துகளையும், சிறிய பந்துகளையும் அதற்குரிய இடத்தில் நிலைநிறுத்த வேண்டும். மொத்தம் 5 பேர் பங்கேற்ற ஒரு டாஸ்க்கில் விஷ்ணு மற்றும் ஜோவிகா ரெண்டு பேரும் மட்டும் இணைந்தே டாஸ்க்கை கொடுக்கப்பட்ட 12 நிமிடத்திற்குள் எளிதாக முடித்தனர்.
டாஸ்க்ல ஜெயித்ததும் எல்லாரும் எந்திரிச்சு நின்னு சந்தோசப்பட்டு கைதட்டுனோம். ஆனால் நிக்ஸன் மட்டும் அமைதியா உக்காந்து இருந்தான். அவனுக்கு ஜெயிக்கிறதுல விருப்பம் இல்ல போல, அவங்க நினைக்கிறவங்க வரனும்னு நினைக்கிறான் போல, என ரவீனா மணியிடம் சொன்னது சரி தான். அவர் முகமும் ‘உள்ள அழுகுறேன், வெளிய சிரிக்கிறேன்’ என்பது போல தான் இருந்தது.
வேக் அப் சாங்கிற்கு சரியாக பெர்ம்பார்ம் பண்ணாதவர்களை பாத் ரூம் க்ளீனிங்கிற்கும், மெத்தைகளை சரியாக மெயிண்டன் செய்யாதவர்களை ஹவுஸ் கீப்பிங்கிற்கும் தன்னிச்சையாக செலக்ட் செய்ய சொல்லி தினேஷ் அவர்களுக்கு பிக்பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்தார். பாத்ரூம் க்ளீனிங்கிற்கு அர்ச்சனா, விஷ்ணு, மாயா, பூர்ணிமா உள்ளிட்டோரையும், ஹவுஸ் கீப்பிங்கிற்கு அக்ஷயா, ஜோவிகா, விசித்ரா, நிக்ஸன் உள்ளிட்டோரையும் தினேஷ் தெரிவு செய்தார்.
“ தினேஷ் கொஞ்சம் மாயாவுக்கு சாஃட் கார்னர் காட்டுவது போல தெரிகிறது, விசித்ரா அவர்களிடம் தனது ரஃக்கடு கேரக்டரை அதிகமாக காட்டுகிறாரோ என்பதும் தோன்றுகிறது “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !