Bigg Boss Tamil 7 | Day 59 | Review | ‘பிக்பாஸ் ராஜாங்கத்தின் சர்வாதிகார ராஜாவான நிக்ஸன் ’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், ஐம்பத்து ஒன்பதாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: பூர்ணிமா, மாயா கான்வர்சேஷன் – மார்னிங் ஆக்டிவிட்டி டாஸ்க் – ஸ்டார் பிரித்தல் – விஷ்ணு VS அர்ச்சனா – பராக் பராக் டாஸ்க்
நேற்று விஷ்ணு, நிக்ஸன் ஒரு சில விதிகளை மீறியதாக கூறி உரிமை மணியை அடித்து இருந்தார், ஆனாலும் நிக்ஸன் சரியான விளக்கம் கொடுத்ததாலும், பூர்ணிமாவின் சப்போர்ட்டாலும் நிக்ஸன் ஸ்ட்ரைக் வாங்காமல் தப்பித்தார். உண்மையில் நிக்ஸன் மீது ஒரு சில பிழைகள் இருக்கிறது நான் அதை சொல்லி இருந்தால் நிச்சயம் ஸ்ட்ரைக் வாங்கி இருப்பான், நான் அவன காப்பத்தனும்னு நினைக்கிறேன் என பூர்ணிமா, மாயாவிடம் விவாதம் செய்து கொண்டு இருந்தார். ஆனால் மாயாவின் நோக்கம் இது ஒரு வாய்ப்பு அதை நிச்சயம் பயன்படுத்தி நிக்ஸனை அடுத்தவார நாமினேசனுக்குள் இழுக்க வேண்டும் என்பது தான்.
ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு சூப்பர் பவர் இருந்தால் அதை கேமிற்குள் கொண்டு வந்து எப்படி விளையாடுவீர்கள் என்பது மார்னிங் ஆக்டிவிட்டி டாஸ்க். விஷ்ணு அடுத்தவங்க மனசுல நினைக்கிறத தெரிஞ்சிக்கனும். அப்ப தான் பொளிர் பொளிர்னு வார்த்தையால அவங்கள அடிக்க முடியும் என கூறினார். அர்ச்சனாவிற்கு டைம் ரிவர்ஸ்சிங் கான்சப்ட் இருந்தால் ஒவ்வொருவரின் குறும்படத்தை பார்க்க முடியும் என ஒவ்வொரு கான்சப்டுகளை அவிழ்த்து விட்டனர். ஆனாலும் விஷ்ணு இலைமறை காயாக கூறியது அர்ச்சனாவை தான் என்பது அனைவராலும் புரிந்து கொள்ள முடிந்தது.
ஹரீஷ் கல்யான் கொடுத்த கோல்டு ஸ்டாரை பிரிக்கும் வாக்கெடுப்பு ஸ்மால் பாஸ்சில் நடைபெற்றது. கூல் சுரேஷ் விஜய்க்கு கொடுக்கலாம் என கூறினார். ஆனாலும் பூர்ணிமா – விஷ்ணு காம்போ அவர்களுக்குள் பிரித்து கொள்ளலாம் என ஐடியா செய்து விட்டார்கள் போல. மணிக்கு 3 ஸ்டார் இருக்கு, விஷ்ணுக்கு 2 இப்ப நாம விஷ்ணுக்கு கொடுப்போம் அவர் சரியா ஸ்டார யூஸ் பண்ணுவாரு என விஷ்ணுவுக்கு ஆதரவாக பேசி விஷ்ணுவிற்கு ஸ்டாரை பெற்றுக் கொடுத்தார் பூர்ணிமா.
தேவையுள்ள பிரச்சினைகளுக்கு விவாதம் செய்தால் பரவாயில்லை. முழுக்க முழுக்க தேவையில்லாத பிரச்சினைகளை மட்டும் எடுத்து அதில் குரலை உயர்த்தி பேசி அடுத்தவர்களை டவுன் செய்வதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார் விஷ்ணு. அதில் பாயிண்ட் ஒன்றுமே இருக்காது வாய்ஸ் மட்டும் தான் இருக்கும். ஸ்டார் பிரச்சினையும் சரி, பொளிச்சு பொளிச்சுன்னு அடிப்பேன்னு சொன்னதிலும் சரி இரண்டிலுமே அர்ச்சனாவிற்கு எதிராக விஷ்ணு செய்த விவாதத்தில் துளி கூட எந்த சரியான பாயிண்டும் இல்லை. அவரை அவரே டவுன் செய்து கொண்டார் அவ்வளவு தான்.
பிக்பாஸ் சொல்லும் நிறத்தை தேடி பிடித்து கொடுக்கப்பட்ட கட்டத்திற்குள் பஸ்சர் அடித்ததும் முதலில் வந்து நிற்கும் ஒருவருக்கு முதல் முடிசூட்டும் விழா நடக்கும் என்பது டாஸ்க். கொடுக்கப்பட்ட நிறம் மஞ்சள் நிக்ஸன் சிம்பிளாக ஒரு மஞ்சள் இலையை எடுத்து வந்து கட்டத்திற்குள் நின்று முதல் ராஜாவாக அலங்கரிக்கப்பட்டார். அவர் எடுத்துக் கொண்ட ராஜாங்கம் சர்வாதிகாரம். அதை சிறப்பாக செய்தார் என்றே சொல்ல வேண்டும்.
“ நிக்ஸனின் ராஜாங்கம், அர்ச்சனா VS விஷ்ணு என்ற இரண்டு பிரச்சினைகளுக்குள் முழு எபிசோடும் முடிந்து விட்டது “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !