தொடரும் இன்ஸ்டாகிராம் மோசடிகள், விளம்பரப்படுத்தி விட்டு கையை விரிக்கும் பிரபலங்கள்!

Instagram Scam Alert Famous People Allowing Without Knowledge Fact Here Idamporul

Instagram Scam Alert Famous People Allowing Without Knowledge Fact Here Idamporul

இன்ஸ்டாகிராம் பிரபலங்களின் விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் ஒரு மிகப்பெரிய மோசடி நிகழ்ந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இலட்சங்களிலும், மில்லியன்களிலும் பாலோவர்ஸ்களை வைத்துக் கொண்டு இன்ஸ்டாகிராமில் பிரபலங்களாக இருக்கும் ஒரு சில நாயகிகளும், நாயகன்களும் டிரேட் பண்ட் என்ற பெயரில் 100 சதவிகிதம் உத்தரவாதம் கொடுத்து ஒரு சில விளம்பரங்களையும் ஐடிகளையும் விளம்பரப்படுத்துகின்றனர். அந்த ஐடிகளிடம் விளம்பரம் குறித்து விசாரிக்கும் போது ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் 50 நிமிடத்தில் பத்தாயிரம், ஐந்தாயிரம் முதலீடு செய்தால் 50 நிமிடத்தில் ஐம்பதாயிரம் என ரீல்களை அள்ளி விடுகின்றனர்.

நமது நம்பிக்கைக்குரிய நாயகிகளும், நாயகன்களும் விளம்பரம் செய்கிறார்களே என நம்பி பாலோவர்ஸ்களும் காசை அள்ளி இறைத்து விட்டு, 50 நிமிடம் கழித்து பணத்தை திரும்ப கேட்கும் போது, நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகை கட்ட வேண்டும், ஜி எஸ் டி கட்ட வேண்டும் என்று மீண்டும் அவர்களிடம் பணத்தை கறக்க ஐடியா போட, ஒரு சிலர் அதையும் கூட சுதாரிக்காமல் பேராசையிலும், தங்களது இன்ஸ்டா நாயகிகள், நாயகன்கள் மீது இருக்கும் நம்பிக்கையாலும் அந்த தொகையையும் கட்டி இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் பணம் திரும்ப வராததை அடுத்து தாங்கள் ஏமாந்ததை உணர்ந்த பாலோவர்ஸ்கள் மோசடி செய்த ஐடியை தேடிய போது ஐடி ஒட்டு மொத்தமாக மறைந்து இருக்கிறது. ஐடியை 100 சதவிகிதம் உத்தரவாதம் கொடுத்து விளம்பரப்படுத்திய பிரபலங்களிடம் இந்த ஏமாற்றத்தை குறித்து விசாரித்த போது அவர்களும் கையை விரித்து இருக்கின்றனர்.

அதிகாரப்பூர்வமாக ஒரு சில இன்ஸ்டா பிரபலங்களிடம் இந்த மோசடி குறித்து விசாரித்த போது அவர்கள் சொல்வது என்னவென்றால் ’நாங்கள் விளம்பரம் மட்டுமே படுத்துகிறோம். எங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் ஒரு சில கன்டிசன்களையும் தான் விளம்பரங்களில் போடுகிறோம். அதை படித்து விட்டு இன்வெஸ்ட் செய்வது என்பது அவர் அவர்களின் ரிஸ்க்’ என்கின்றனர். இன்னும் ஒரு சில எக்ஸ்பெர்ட்களிடம் கேட்ட போது இன்ஸ்டா நாயகிகளும், நாயகன்களுமே ஒரு சில பேஃக் டிரேட் பண்ட் ஐடிகளை கிரியேட் செய்து விட்டு அதை தங்களின் ஒரிஜினல் ஐடிகள் மூலம் பிரபலப்படுத்தி பணம் பறிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

“ இதில் இருந்து மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்று தான், பணம் விஷயத்தில் எந்த பிரபலங்களையும் நம்பி முதலீடு செய்ய வேண்டாம். பணம் எப்போதும் 99.9 சதவிகிதம் உழைப்பினால் மட்டுமே வரும், அந்த 0.1 சதவிகிதம் வேண்டுமானால் அதிர்ஸ்டத்தில் கிடைக்கலாம் அவ்வளவு தான் “

About Author