இதை பின்பற்றினால் போதும், நீங்கள் TNPSC குரூப் 1 தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்!

TNPSC Group 1 How To Crack Prelims Easily Idamporul

TNPSC Group 1 How To Crack Prelims Easily Idamporul

TNPSC குரூப் 1 தேர்வில் எளிதாக எப்படி வெற்றி பெறலாம் என்பது குறித்து இதில் முழுமையாக பார்க்கலாம்.

குரூப் 1 தேர்வு என்பது சப்கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்காக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தும் தேர்வு ஆகும். இதில் தேர்வுகள் என்பது Prelims, Mains என்று இரண்டு கட்டமாக முதலில் நடக்கும். இதில் தேர்வு பெறுபவர்களுக்கு இறுதியாக இண்டர்வியூவும் இருக்கும். Prelims, Mains, Interview என்று மூன்று கட்டங்களையும் சேர்த்து வழங்கப்படும் மார்க்கில் முதன்மையில் இருப்பவர்களுக்கு பணி வழங்கப்படும்.

TNPSC Group 1 Syllabus:

முதலில் எந்த தேர்வாக இருந்தாலும் Syllabus என்பது மிக மிக அவசியம். Prelims மற்றும் Mains தேர்வுகளுக்கான Official Syllabus அடங்கிய PDF லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

Prelims Syllabus:

https://drive.google.com/file/d/1JXjrVyEwV20Wl2-5VZNRMrp4tJq20IsM/view?usp=drive_link


Mains Syllabus:

https://drive.google.com/file/d/1UWDQhYEW1CQVmRFjRhqLlNU-NhE145GX/view?usp=drive_link


சரி Syllabus எடுத்தவுடன் அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும், Syllabus-யில் இருக்கும் டாபிக்குகளை எங்கு இருந்து படிக்க வேண்டும் என்ற கேள்வி மனதில் எழும். Prelims பொறுத்தவரை ஸ்டேட்போர்டு சிலபஸ்சில் இருக்கும் பழைய மற்றும் புதிய பாடப்புத்தகங்களே போதுமானது. புத்தகம் முழுக்க படிக்க வேண்டுமா என்று கேட்டால் இல்லை. சிலபஸ்சில் இருக்கும் டாபிக்குகளை மட்டும் புத்தகத்தில் குறித்து வைத்து படித்தால் போதும். ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை இருக்கும் புத்தகங்கள் கையில் வைத்து இருப்பது மிக அவசியம்.

சரி ஒவ்வொரு டாபிக்குகளையும் எப்படி ஒவ்வொரு புத்தகத்தில் எங்கு இருக்கிறது என்பதை பார்ப்பது என்ற கேள்வி மனதில் எழும். ஒவ்வொரு புத்தகத்தையும் புரட்டி பார்ப்பது கடினம். அதற்கு தான் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இருக்கும் பாடங்களின் Table Of Content இருந்தால் வசதியாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு அதன் PDF லிங்க் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது அதையும் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Science Table Of Content:

https://drive.google.com/file/d/1KGcx4wxNpKGUpYv_6otRI_rcEDabDTmC/view?usp=drive_link


Social Table Of Content:

https://drive.google.com/file/d/1jPNE5umCn_ZP7wLhJFHwtfRxOk_uwdLJ/view?usp=drive_link

சரி இந்த Table Of Content வைத்துக் கொண்டும் உங்களுக்கு Syllabusசில் இருக்கும் டாப்பிக்குகளை தேடுவதற்கு சிரமமாக இருந்தால், அதற்கென்று ஒரு குறிபிட்ட அகாடமியில் இருந்து கொடுக்கப்பட்ட ’Where To Study’ PDF லிங்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Where To Study:

https://drive.google.com/file/d/1XzmhZVrSLd96gUajdginspbgFUvF6zaN/view?usp=drive_link

சரி பாடப்புத்தகங்கள் வேண்டுமே என்றால் பழைய புத்தகங்கள் மற்றும் புதிய சமச்சீர் புத்தகங்களை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கென்ற நிறைய வெப்சைட்டுகள் இருக்கின்றன. அந்த லிங்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TN School Old Books Download Link:

https://tnpscfire.blogspot.com/p/old-school-books-tamil-medium.html

TN Samacheer New Books Download Link:

https://www.tntextbooks.net/#google_vignette

சரி எல்லாம் கிடைத்து ஆகிற்று, எந்தெந்த டாப்பிக்குகளில் அதிக வெயிட்டேஜ் கொடுக்க வேண்டும் என்ற தகவல் வேண்டுமே என்றால் அதற்கு முந்தைய வினாத் தாள்கள் தேவைப்படும். அது புத்தக வடிவிலும் இருக்கிறது. அதே சமயத்தில் ஒரிஜினல் வினாத்தாள்கள் விடையுடன் TNPSC யின் அதிகாரப்பூர்வ தளத்திலும் இருக்கின்றன.

புத்தகமாக வாங்க நினைப்பவர்கள் கீழே இருக்கும் லிங்கை சொடுக்கலாம்

https://amzn.eu/d/fOlj9zE

” Syllabus, Table Of Contents, Where To Study, Old Question Papers இவ்வளவு தான், முதலில் இதை பயன்படுத்திக் கொண்டு ஒரு தெளிவான ஐடியாவிற்கு வந்து விட்டாலே நீங்கள் Prelims க்ளியர் தான், பயன்படுத்திக் கொள்ளுங்கள் நிச்சயம் வெற்றி கிட்டும் “

About Author