சீமானின் பெயரை பயன்படுத்தி ஈழத்தமிழர்களிடம் இருந்து நிதி பெற்றாரா சாட்டை துரைமுருகன்?
NIA விசாரணையில், சீமான் அவர்களின் பெயரை பயன்படுத்தி சாட்டை துரை முருகன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், ஈழத்தமிழர்கள் பலரிடம் இருந்து பல கோடிகள் பணம் பெற்றது உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நாம் தமிழர் கட்சியை சார்ந்த ஒரு சில முக்கிய பிரமுகர்கள், மீண்டும் ஈழத்தில் ஒரு ஆயுதப்போராட்டம் நடத்துவோம் என கூறி வெளிநாடுகளில் வசிக்கும் ஈழத்தமிழர்களிடம் பல கோடிகள் நிதி திரட்டியதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டை ரகசியமாக விசாரித்து வந்த NIA பல கட்ட விசாரணைகளுக்கு பிறகு, நேரடியாக களத்தில் இறங்கி நாம் தமிழர் கட்சியை சார்ந்த பல முக்கிய நிர்வாகிகளின் வீட்டில் சோதனை நிகழ்த்தியது.
இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும், முக்கியமாக நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளராக அறியப்படும் சாட்டை துரைமுருகன் இதற்கு முக்கிய பின்புலமாக செயல்பட்டதாகவும் தகவல் வெளியானது. அதாவது முதலில் வெளிநாடுகளில் வசிக்கும் ஈழத்தமிழர்களிடம் சாட்டை துரை முருகன் உள்ளிட்டோர் சமூக வலைதளங்களின் வாயிலாக தொடர்புகளை ஏற்படுத்தி இருக்கின்றனர். அதற்கு பின்னர் மீண்டும் ஈழத்தில் ஒரு ஆயுதப் போராட்டம் நடத்துவோம் என அவர்களிடம் கூறி, இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப்புலிகள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பெயரையும் பயன்படுத்தி, ஒரு நம்பகத்தன்மையை உருவாக்கி, அவர்களிடம் இருந்து பல கோடிகளில் நிதியை திரட்டி இருக்கின்றனர். இந்த நிதியின் மூலம் அவர்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதம் தயாரிக்க திட்டமிட்டு இருந்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. வெகுவிரைவில் அனைத்தும் நிரூபிக்கப்படும் பட்சத்தில் இதன் பின்னனியில் இருக்கும் அனைவரும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.
” முழுக்க முழுக்க சீமானின் பெயரை பயன்படுத்தி நிதி திரட்டி இருக்கும் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நாம் தமிழர் பிரபலங்கள், இதனால் ஏதும் பிரச்சினை வந்தால் அதன் மூலம், சீமானின் பெயருக்கு களங்கம் விளைவித்து, கட்சியை தங்கள் வசப்படுத்தவும், முடியாவிடின் கட்சியில் தங்களுக்கு நெருக்கமானவர்களை எல்லாம் சாட்டை துரைமுருகன் தலைமையில் திரட்டி, புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கவும் முயற்சித்த திட்டமும் அம்பலம் ஆகி இருக்கிறது “