மகளிருக்கு வழங்கும் இலவச பேருந்து சேவையை, ஆடவர்களுக்கும் வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
மகளிருக்கு வழங்கும் இலவச பேருந்து சேவையை ஆடவர்களுக்கும் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்து இருக்கிறார்.
சென்னையில் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு காற்று மாசுபாடு மற்றும் நுரையீரல் பிரச்சினைகளால் கிட்ட தட்ட நான்காயிரம் பேர் இறப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த காற்று மாசுபாடுக்கு பெரும் பங்கு வகிப்பது கார்களும், பைக்குகளும் வெளியேற்றும் கார்பன் மோனாக்ஸைடுகள் தான். வேலை நிமித்தம் என்று கார், பைக்குகளை அதிகம் பயன்படுத்துவது ஆடவர்களாக தான் இருக்கிறார்கள்.
அவர்களுக்கும் இலவச பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டால், அவர்களும் பொது போக்குவரத்தை பயன்படுத்த அதிகம் வாய்ப்பு இருக்கிறது. ஆதலால் மகளிருக்கு வழங்கும் இலவச பேருந்து சேவையை ஆடவர்களுக்கும் அரசு வழங்கினால், அவர்களும் பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தும் பட்சத்தில் சென்னை உள்ளிட்ட மாநரகங்களில் காற்று மாசுபாடு குறைய வாய்ப்புகள் இருக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்து இருக்கிறார்.
“ இலவசம் கூட வேண்டாம், குறைந்த விலையில் பாஸ் உள்ளிட்டவைகள் வழங்கினால் வேலைக்கு செல்பவர்களும் பொது போக்குவரத்தை பயன்படுத்த அதிகம் வாய்ப்பு இருக்கிறது என இணையவாசிகள் கூறி வருகின்றனர் “