உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தர வரிசையில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது இந்தியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதற்கு பின்பு இந்தியா, தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 3-1 என முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன் வரிசையில் 64.58 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. 75 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.
“ ஆஸ்திரேலியா 55 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், வங்கதேசம் 50 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் இருக்கிறது, இங்கிலாந்து 19.44 புள்ளிகளுடன் 8 ஆவது இடத்தில் இருக்கிறது “