இந்தியாவில் மைனாரிட்டிகளுக்கு எதிராக அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சுகள்!
இந்தியாவில் மைனாரிட்டிகளுக்கு எதிராக வெறுப்பு பேச்சுகள் அதிகரித்து வருவதாக ஒரு ஆய்வில் தகவல் கிடைத்து இருக்கிறது.
இந்தியாவில் மைனாரிட்டிகளுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் 75 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாக ஒரு ஆய்வில் தகவல் கிடைத்து இருக்கிறது. கடந்த 2023-யில் மட்டும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் 668 பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் (118), உத்தர பிரதேசத்தில் (104) இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் பதிவாகி இருப்பதாக தகவல்.
“ சமத்துவம், மதச்சார்பின்மை எல்லாம் அரசிலமைப்பு புத்தகங்களில் வைத்து மூடப்பட்டு விட்டது, இங்கு அரசியல் இலாபத்திற்காக எதையும் பேச துணிபவர்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள் என இணையவாசிகள் இது குறித்து பதிவிட்டு வருகின்றனர் “