IPL 2024 | Match No 2 | ’இன்றைய முதல் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது டெல்லி’

IPL 2024 Match No 2 PBKS Facing Delhi Capitals Today Idamporul

IPL 2024 Match No 2 PBKS Facing Delhi Capitals Today Idamporul

ஐபிஎல் 2024-யின் இன்றைய முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது டெல்லி கேபிடல்ஸ்.

இன்று இரண்டு போட்டிகள், முதல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி, ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. சண்டிகர் முல்லன்பூர் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் 3:30 மணியில் இருந்து நேரலையில் ஒளிபரப்பாகும்.

கணிப்பு

இரு அணிகளுமே நிறைய நிறைய புதுமுகங்களை கையில் வைத்து இருக்கின்றன. இருந்தாலும் பஞ்சாப் அணியை கம்பேர் செய்யும் போது அணியின் சமநிலையில் கொஞ்சம் டெல்லியின் கைகள் ஓங்கி இருக்கிறது. வருடம் வருடம் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை குறி வைத்துக் கொண்டே சீசனை கடக்கின்ற பஞ்சாப் அணி, ஷிகர் தவான் தலைமையில், நிறைய புதுமுகங்களுடன் என்ன செய்ய போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

நேருக்கு நேர்

இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதிய 32 போட்டிகளுள், டெல்லி அணி 16 போட்டிகளிலும், பஞ்சாப் அணி 16 போட்டிகளிலும் வென்று சமநிலையில் இருக்கின்றன.

ஸ்குவாட்

Delhi Capitals Squad: David Warner, Prithvi Shaw, Mitchell Marsh, Rishabh Pant(c), Shai Hope(w), Axar Patel, Lalit Yadav, Kuldeep Yadav, Mukesh Kumar, Anrich Nortje, Khaleel Ahmed, Ishant Sharma, Ricky Bhui, Jhye Richardson, Praveen Dubey, Rasikh Dar Salam, Jake Fraser-McGurk, Sumit Kumar, Kumar Kushagra, Tristan Stubbs, Yash Dhull, Vicky Ostwal, Abishek Porel, Swastik Chikara

Punjab Kings Squad: Shikhar Dhawan(c), Prabhsimran Singh, Jonny Bairstow, Sikandar Raza, Jitesh Sharma(w), Sam Curran, Harshal Patel, Rahul Chahar, Arshdeep Singh, Kagiso Rabada, Harpreet Brar, Nathan Ellis, Shivam Singh, Chris Woakes, Liam Livingstone, Rilee Rossouw, Harpreet Singh Bhatia, Rishi Dhawan, Shashank Singh, Tanay Thyagarajan, Ashutosh Sharma, Atharva Taide, Vidhwath Kaverappa, Prince Choudhary, Vishwanath Singh

“ இரு அணிகளிலும் அனுபவம் பாதி, அனுபவமின்மை பாதி என கலந்தும் இருக்கிறது. இருந்தாலும் களத்தில் எந்த அணி தங்கள் ஆளுமையை நிரூபிக்க போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author