22 இலட்சம் வீடியோக்களை நீக்கிய யூடியூப் நிறுவனம், காரணம் என்ன?
இந்தியர்கள் பதிவிட்ட 22 இலட்சம் வீடியோக்களை யூடியூப் தளத்தில் இருந்து யூடியூப் நிறுவனம் நீக்கி இருக்கிறது. அதற்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.
உலகளாவிய அளவில் யூடியூப் நிறுவனத்தின் விதிமுறைகளை மீறி, யூடியூப் தளத்தில் பதிவிடப்பட்ட இரண்டு கோடி வீடியோக்களை, நிறுவனம் நீக்கி நடவடிக்கை எடுத்து இருக்கிறது. அதில் அதிகபட்சமாக இந்தியர்கள் பதிவிட்ட வீடியோக்கள் தான் நீக்கப்பட்டு இருப்பதாகவும், அதன் எண்ணிக்கை கிட்ட தட்ட 22.5 இலட்சங்களை நெருங்கும் எனவும் கூறப்படுகிறது.
அதற்கு அடுத்தப்படியாக சிங்கப்பூரை சார்ந்தவர்கள் பதிவிட்ட 12.43 இலட்சம் வீடியோக்களும், அதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவை சார்ந்தவர்கள் பதிவிட்ட 7.88 இலட்சம் வீடியோக்களும் யூடியூப் நிறுவனத்தால் நீக்கப்பட்டு இருக்கிறது. இது போக உலகளாவிய அளவில் யூடியூப் விதிமுறைகளை மீறியதாக கூறி 2.05 கோடி சேனல்களும், அந்த சேனல்களைச் சார்ந்த 9.55 கோடி வீடியோக்களும் யூடியூப் தளத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.
“ இது அனைத்தும் டிசம்பர் 2023 வரை பதிவிடப்பட்ட வீடியோக்கள் எனவும், வன்முறைகள், ஆபாசங்கள், உண்மை தன்மைக்கு புறம்பான வீடியோக்கள் மற்றும் அதை தொடர்ந்து பதிவிட்டு வந்த சேனல்கள் மட்டுமே நீக்கப்பட்டு இருப்பதாகவும் யூடியூப் நிர்வாகம் கூறி இருக்கிறது “