IPL 2024 | ‘பெங்களுரு அணியின் சாதகங்கள் பாதகங்கள் என்ன?’
ஐபிஎல் 2024 சீசனில் டு பிளஸ்சிஸ் தலைமையில் விளையாடி வரும் பெங்களுரு அணியின் சாதகங்கள் பாதகங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
இதுவரை மூன்று போட்டிகள் விளையாடி ஒன்றில் மற்றுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறது டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி.
சாதகங்கள்
ஒரு சரியான துவக்கத்திற்கு, டு பிளஸ்சிஸ் மற்றும் விராட் கோஹ்லி, இவர்களுக்கு பின் அதிரடியை துவக்க மேக்ஸ்வெல் மற்றும் கேமருன் க்ரீன், இறுதியில் பினிஷ் செய்வதற்கு தினேஷ் கார்த்திக் என்று பேட்டிங்கில் அனைத்து சாதகங்களையும் தன்வசம் கொண்டு இருக்கிறது பெங்களுரு.
பாதகங்கள்
ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்ஸ்மேன்கள் கவனம் செலுத்த வேண்டும், சின்னசாமி ஸ்டேடியம் என்ற சின்ன ஸ்டேடியத்தில் கூட 150 ஸ்ட்ரைக் ரேட்டை பேட்ஸ்மேன்கள் தாண்ட மறுக்கின்றனர். இது போக பவுலிங் யூனிட்டும் பெயர் சொல்லும் அளவுக்கு இல்லை. ஆர்சியின் நட்சத்திர பவுலர் சிராஜ் அவர்களே ரன் மெசினாகா இருக்கிறார், அவரைத் தாண்டி அங்கு நட்சத்திர பவுலர்கள் யாரும் இல்லை. சஹால் என்று இருந்த ஒரு நல்ல பவுலரையும் விட்டுக் கொடுத்து இருக்கிறது ஆர்சிபி மேனேஜ்மெண்ட்.
என்ன செய்யலாம்?
பெர்குசன், கர்ன் ஷர்மா, வில் ஜாக்ஸ் இந்த காம்போக்களை களத்தில் இறக்கி விட்டு முயற்சி செய்து பார்க்கலாம். பவர்பிளேக்களில் கொஞ்சம் ஸ்ட்ரைக் ரேட்டை பேட்ஸ்மேன்கள் நகர்த்த முயற்சிக்க வேண்டும். இந்த இரண்டையும் செய்தால் வரும் ஆட்டங்களி பெங்களுரு அணி ஜொலிக்க வாய்ப்பு இருக்கிறது.
“ கோப்பையை வெல்லும் கனவில் ஆர்சிபி அணி இருக்குமானால் இனி வரும் போட்டிகளில் ஆவது கொஞ்சம் பிளேயிங் 11 யில் சுதாரிக்க வேண்டும் “