சுட்டெரிக்கும் வெயில் ஜூன் வரை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்
சுட்டெரிக்கும் வெயில் ஆனது வருகின்ற ஜூன் மாதம் வரை நிச்சயம் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.
ஏற்கனவே தமிழகமெங்கும் அனலாக வெயில் அடித்துக் கொளுத்திக் கொண்டு இருக்கும் வேளையில், இந்த சுட்டெரிக்கும் வெயில் ஜூன் மாதம் வரை நீடிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது. இன்றிலிருந்து 6 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் வெப்ப அலை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வும் மையம் கூறி இருக்கிறது.
சரி, கத்திரி வெயிலை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும்?
1) தேவையில்லாமல் அடிக்கடி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
2) மார்க்கெட்டிங், டெலிவரி வேலை செய்பவர்கள் கையில் குறைந்த பட்சம் 2 லிட்டர் தண்ணீர் பாட்டில்களை கையில் வைத்துக் கொண்டு வேலைக்கு செல்லுங்கள், நாவு வறண்டு போகும் போதெல்லாம் நிறைய தண்ணீர் பருகுங்கள்.
3) வெள்ளரிக்காய், தண்ணீர் பழம் ஆகியவற்றை வாரத்திற்கு இரண்டு முறையாவது எடுத்துக் கொள்ளுங்கள்.
4) கருப்பு நிற ஆடைகளை உடுத்துவதை தவிர்த்து விடுங்கள்.
5) வயதானவர்கள் வெளியில் வர வேண்டிய அவசியம் இருப்பின் காலை அல்லது மாலை சமயங்களில் மட்டும் வந்து விட்டு மற்ற நேரங்களில் வீட்டிலேயே இருந்து விடுங்கள்.
6) ஹெல்மெட் அணிபவர்களாக இருந்தால், பைக்குகளை வெயிலில் விடும் போது ஹெல்மெட்டை கையில் எடுத்துக் கொள்ளுங்கள்.
7) நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 4 லிட்டர் வரை நீர் பருகுங்கள்.
8) தினமும் ஆபிஸ்சுக்கு நடந்து செல்பவர்களாக இருந்தால் நல்ல குடை ஒன்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள், வெயிலில் செல்லும் முன் குடையை நனைத்துக் கொண்டால் குடைய தாண்டி வரும் வெப்ப அலைகள் கட்டுப்படுத்தப்படும்.
9) குழந்தைகளை எல்லாம் நிழல் பகுதிகளிலேயே விளையாட அனுமதியுங்கள், இரண்டு வேளை குளிப்பாட்டி விடுங்கள்.
10) வெயில் காலங்களில் வருகின்ற மஞ்சள் காமாலை, டெங்கு உள்ளிட்டவைகளை தவிர்க்க வேண்டுமானால் முடிந்த அளவிற்கு நீர் ஆகாரங்களை அதிகமாக பருகுங்கள்.
“ அடிக்கும் வெயிலை பார்க்கும் போது நிச்சயம் இந்த வருடம் பெரும்பாலான பகுதிகளில் நீர் தட்டுப்பாடும் நிகழும் அபாயம் இருக்கிறது. முடிந்த அளவு நீரை வேஸ்ட் ஆக்காமல் பயன்படுத்துங்கள் “