மும்பை நிர்வாகம் எடுத்த தவறான முடிவால் ரசிகர்களிடையே வெறுப்பை சம்பாதிக்கும் ஹர்திக் பாண்டியா!

So Much Of Hate Towards Hardik Pandya Why Details Here Idamporul

So Much Of Hate Towards Hardik Pandya Why Details Here Idamporul

மும்பை நிர்வாகம் எடுத்த ஒரு தவறான முடிவால், மும்பை ரசிகர்ளிடையே தொடர்ந்து வெறுப்பை சம்பாதித்து வருகிறார் ஹர்திக் பாண்டியா.

மூன்று போட்டிகள், மூன்று தோல்விகள், புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் என மும்பைக்கு இந்த ஐபிஎல் கொஞ்சம் கூட எடுபடவில்லை. இதற்கு காரணம் கேப்டன் ஹர்திக் தான் என்று பொதுப்படையாக அனைவரும் கூறினாலும் கூட, உண்மையான காரணம் என்பது நிச்சயம் மும்பை நிர்வாகம் எடுத்த ஒரு தவறான முடிவு தான்.

ஹர்திக் குஜராத் அணிக்கு சென்ற போது அங்கு அவருக்கு எல்லாமே சரியாக அமைந்து இருந்தது. குஜராத் அணிக்கு தலைமை ஏற்று இரண்டு சீசன்களில் ஒன்றில் கோப்பையை கைப்பற்றிக் கொடுத்தார். இன்னொறு சீசனில் அணியை இறுதிப் போட்டி வரைக்கும் அழைத்துச் சென்று இருந்தார்.

இந்த நிலையில் குஜராத் அணியில் இருந்து ஹர்திக்கை மீண்டும் மும்பைக்கு கோடிகள் கொடுத்து இழுத்தது மும்பை நிர்வாகம். இழுத்தது என்னவோ சரியான முடிவு தான். ஆனால் இப்போது இருக்கும் மும்பை அணி பழைய மும்பை அணி இல்லை. பல சில்லுகளாக உடைந்த மும்பை. அதை கொஞ்சம் கொஞ்சமாக ரோஹிட் போன சீசனில் இருந்து ஒன்று சேர்த்துக் கொண்டு இருந்தார். அதற்குள் ஹர்திக் கேப்டனாகி மீண்டும் அனைத்தையும் கலைத்து விட்டு நானே சேர்க்கிறேன்.

ஹர்திக்கை இழுத்துப் போட்ட மும்பை அவரை துணை கேப்டன் ஆக்கி இருக்கலாம். இந்த ஒரு சீசன் ரோஹிட் தலைமையில் மும்பையை ஆட வைத்து இருந்தால் அவர் அணியை முழுமையாக கட்டமைத்து இருப்பார். ஹர்திக்கிற்கும் அணியை நன்றாக புரிந்து கொள்ள நேரம் இருந்து இருக்கும். தற்போதைய இக்கட்டான சூழலில் ஹர்திக் தலையில் சுமையை ஏற்றி விட்டு, அவருக்கு அழுத்தமும் கொடுத்து, ரசிகர்களிடன் வெறுப்பையும் சம்பாதிக்க விட்டு வேடிக்கை பார்க்கிறது மும்பை நிர்வாகம்.

“ சென்னை அணியின் தலைமையாக ஜடேஜா சொதப்பிய போது, சென்னை மீண்டும் தோனிக்கு வாய்ப்பு கொடுத்து அடுத்த சீசனே கோப்பையையும் கைப்பற்றியது. மும்பை சென்னை எடுத்த அதே முடிவை மீண்டும் எடுத்து ரோஹிட்டை கேப்டனாக்கி, ஹர்திக்கை துணை கேப்டனாக நியமித்து ஹர்திக்கின் மீது இருக்கும் சுமையை குறைக்க வேண்டும் என்பது தான் ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது “

About Author