அன்று ஷூவிற்கு கூட வழி இல்லை, ஆனால் இன்று லக்னோ அணியின் சூப்பர் ஸ்டார்!
அன்று விளையாடுவதற்கு ஒரு நல்ல ஷீ கூட இல்லாமல் டெல்லியில் திரிந்த மாயங் யாதவ் தான் இன்று லக்னோ அணியின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
ஆரம்ப காலக்கட்டம்
டெல்லியில் ஒரு பயிற்சி மையத்தில் பயிற்சி எடுக்கும் பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசி தனது கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கி இருக்கிறார் மாயங் யாதவ். அந்த காலக்கட்டத்தில் அவருக்கென்று ஒரு நல்ல ஷீ வாங்க கூட வழி இருக்காதாம். பயிற்சி மையமே அவருக்கு பவுலிங் கிட்கள் வாங்கி கொடுத்து அவரை ஊக்கப்படுத்தி இருக்கிறது. இந்த சமயத்தில் தான் கோவிட் நாட்டில் தலை விரித்தாட, மாயங் அப்பாவின் வியாபாரம் முடங்கி குடும்பம் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. என்ன தான் ஏழ்மை வாட்டினாலும் கூட மாயங் தனது திறமையை கைவிடுவதாக இல்லை. தொடர்ந்து வாய்ப்புகளுக்காக ஏங்கி கொண்டே இருந்தார்.
ஐபிஎல் டிபட்
இந்த நிலையில் தான் லக்னோ அணி, மாயங் யாதவ் அவரின் திறமையைக் கண்டு வியந்து கடந்த ஐபிஎல் சீசனுக்கு முன்பாகவே அவரை அணியில் எடுத்து இருந்தது. ஆனாலும் கூட காயம் காரணமாக அந்த சீசன் முழுக்க அவரால் பங்கேற்க முடியவில்லை. பிக் ஆக்சன் வந்த போதும் கூட லக்னோ அணி அவரை ரிலீஸ் செய்யாமல் வைத்து இருந்தது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. காரணம் அவரின் அசாத்திய திறமையை லக்னோ அணி ஏற்கனவே உணர்ந்து இருக்கிறது. அவர் காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான அத்துனை செலவுகளையும் லக்னோ அணியே ஏற்றுக் கொண்டதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் தான் தற்போதைய சீசனில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் களம் இறங்கினார் மாயங் யாதவ். நான்கு ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு துணை புரிந்தார். அவரது எக்ஸ்பிரஸ் வந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் களத்தில் பேட்ஸ்மேன்கள் டேன்ஸ் ஆடிக் கொண்டு இருந்தனர். பெங்களுரு அணிக்கு எதிரான போட்டியிலும் நான்கு ஓவர்களுக்கு 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுக்களையும் மாயங் கைப்பற்றி ஒரு எதிர்கால ஸ்டார் உருவாவதை உருவாகி விட்டதை உறுதி செய்து இருக்கிறார்.
“ பெரும்பாலும் ஸ்பீட் இருக்கும் இடத்தில் கண்ட்ரோல் இருப்பதில்லை. ஆனால் மாயங் அவர்களிடம் ஸ்பீடும் இருக்கிறது, கண்ட்ரோலும் இருக்கிறது. இன்னும் மெருகேற்றினால் இந்திய அணியின் பிரட்லீயாக கூட மாயங் யாதவ் வலம் வருவார் என்பதில் ஐயமில்லை “