சூர்யவம்சம் | Re-View | ‘இது அந்த காலக் கட்டத்தில் குடும்பங்கள் கொண்டாடிய வெற்றிப்படம்’

Suryavamsam Movie Re View In Tamil Idamporul

Suryavamsam Movie Re View In Tamil Idamporul

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் விக்ரமன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சரத்குமார், ராதிகா, தேவயானி, மணிவண்ணன் மற்றும் பலரின் நடிப்பில் 27 ஜூன் 1997 -யில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படமான சூர்யவம்சம் திரைப்படம் குறித்து இந்த ரீ-வியூவில் பார்க்கலாம்.

கதைக்களம்

கடிந்து கொள்ளும் அப்பா, பாசக்கார மகன் இருவருக்கும் இடையில் நடக்கும் ஒரு பாசமான யுத்தத்தில் இருவரும் இணைந்தார்களா, மகனின் பாசத்தை அப்பா புரிந்து கொண்டாரா என்பதை சுவாரஸ்யமாக பல எமோசன்களுடன் ஒன்றிணைத்து இருப்பார் இயக்குநர் விக்ரமன்

ரீ-வியூ

அப்பா சக்திவேல் கவுண்டர் படித்தவர் ஊரிலும், ஊர் மக்களிடமும் மிகப்பெரிய அளவிற்கு செல்வாக்கு மிக்கவர், மகன் சின்னராசு துளியும் படிக்காதவர், ஊர் சுற்றித் திரிபவர், வம்புகளை அளந்து கொண்டு வருபவர், ஒரு சிறு பிரச்சினையால் அப்பா சக்திவேல், மகன் சின்னராசுவிடம் துளியும் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்வதில்லை. இந்த நிலையில் தான் சக்திவேல் கவுண்டரின் மகளுக்கும், நந்தினியாக வரும் தேவயானி அவர்களின் அண்ணனுக்கும் நிச்சயம் நடக்கிறது. இந்த நிச்சயத்தில் சின்னராசுவை, நந்தினி சந்திக்கிறார். நந்தினி, சின்னராசுவை பற்றி அறிந்து கொள்ள இயலுகிறது. படிக்காதவர் என்றாலும் கூட சின்ராசுவின் குணம் பிடித்துப் போகவே அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார் நந்தினி.

இதற்கு பின் நடக்கும் பல திருப்பங்கள் தான்கதையை சுவாரஸ்யம் ஆக்கி இருக்கும். சக்திவேல் கவுண்டர் ஏன் தன் சொந்த மகனையே வெறுக்கிறார், படிக்காத சின்னராசுவை திருமணம் செய்து கொள்ளும் நந்தினி, திருமணம் செய்து கொண்ட இருவரையும் வீட்டை விட்டே அனுப்பி விடும் சக்திவேல் கவுண்டர். தன் சொந்தக் காலில் நின்று உழைத்து அப்பாவை விட இலட்சாதிபதி ஆகும் சின்னராசு, கூடவே மனைவியின் கனவையும் சேர்த்து நிறைவேற்றும் விதம் என படத்தில் நிறையவே இன்ஸ்பிரேசன்கள் இருக்கும்.

மகனுக்கும் தந்தைக்குமான ஒரு பாசப்போராட்டம் தான் கதைக்களம் என்றாலும் கூட அதில் நிறைய விடயங்களை விக்ரமன் சொல்லி இருப்பார். கதையில் ஒரு காதல் தோல்வி இருக்கும், அந்த காதல் தோல்விக்கு பின் கரம் கொடுக்கும் ஒரு காதல் இருக்கும், உயர்வதற்கு படிப்பு என்பது மட்டுமே அத்தியாவசியம் என்பது இல்லை, உழைப்பும் முயற்சியும் இருந்தால் தெரிந்த தொழிலை வைத்து கூட வான் அளவு உயரலாம் என்ற கருத்தும் இருக்கும். மனைவிக்காக, கணவனும், கணவனுக்காக மனைவியும் புரிகின்ற ஒரு காதல் மெனக்கெடல்கள் இருக்கும்.

எஸ் ஏ ராஜ்குமார் அவர்களின் இசையில் படத்தின் அத்துனை பாடல்களுமே ஹிட், அந்த காலக்கட்டத்தில் குடும்பங்களை ஒட்டு மொத்தமாக தியேட்டருக்குள் இழுத்த திரைப்படம். நடிகர் சரத்குமார் அவர்களுக்கும் மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்த திரைப்படம். அந்த காலக்கட்டத்தில் தமிழக அரசு கலைத்துறைக்கு வழங்கும் விருதுகளில் 6 பிரிவுகளில் விருதுகளை அள்ளியது இப்படம். நடிகர் சரத்குமார் அவர்களுக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் அவார்டும் இந்த படத்திற்காக கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

“ அந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் ஆக அறியப்பட்ட சூர்யவம்சம் அதற்கு அடுத்தடுத்த வருடங்களில், தெலுங்கு, கன்னம், ஹிந்தி மொழிகளிலும் ரீ மேக் செய்யப்பட்டது, ’உண்மையான குடும்ப படம்னா இது தான் டா’ என இன்றைய குடும்ப படங்களுக்கு அன்றே சாட்டையடி கொடுத்து இருக்கிறார் இயக்குநர் விக்ரமன் “

About Author