அன்று ஏலத்தில் தவறாக எடுக்கப்பட்டவர், இன்று பஞ்சாப் அணியின் நாயகன்!
அன்று பஞ்சாப் நிர்வாகத்தால் ஏலத்தில் தவறாக எடுக்கப்பட்ட ஷஷாங் சிங், இன்று பஞ்சாப் அணியின் நாயகனாக உருவெடுத்து இருக்கிறார்.
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் எதிர்கொண்டன. முதலில் ஆடிய குஜராத் அணி, பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்கு வைத்தது. அதற்கு பின் ஆடிய பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர்கள் சீரிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறிகொடுத்ததால், அவ்வளவு தான் இனி பஞ்சாப் அணி தோல்வியை தான் எதிர்கொள்ள போகிறது என்று நினைத்துக் கொண்டு இருந்த போது இரண்டு வீரர்கள் வந்து ஆட்டத்தையே மாற்றி பஞ்சாப் அணியை வெற்றிப் பாதைக்கு இழுத்துச் சென்றனர்.
இதற்கு முன் அவர்களின் பெயரை யாரும் கேள்விப்பட்டு இருப்பார்களா என்பது தெரியாது. ஆனால் அவர்கள் டொமஸ்டிக் கிரிக்கெட்டின் ஹீரோக்கள். ஒருவர் அசுவதோஷ், 17 பந்துகளில் 31 ரன்கள், இன்னொருவர் ஷஷாங் சிங், 29 பந்துகளில் 61 ரன்கள், குஜராத் அணியின் நட்சத்திர பவுலர்களான ரஷீத் கான், மோஹித் ஷர்மா, உமேஷ் யாதவ் என அனைத்து பவுலர்களின் பந்துகளையும் இவர்கள் நாலா பக்கமும் சிதறடித்து பஞ்சாப் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
இதிலும் வெற்றிக்கு உறுதுணை புரிந்த ஷஷாங் சிங், பஞ்சாப் நிர்வாகத்தால் ஏலத்தில் தவறாக எடுக்கப்பட்டவராம். ஏலத்தின் போது இரு ஷஷாங் சிங் இருந்ததாகவும், பஞ்சாப் நிர்வாகம் தவறாக இவரை எடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. தவறாக எடுக்கப்பட்டவர் என்ற டாக் உடன் பஞ்சாப் அணிக்குள் நுழைந்த ஷஷாங் சிங், இன்று தனது திறமையை அணிக்கு நிருபித்து, பஞ்சாப் அணியின் ஒரு ஹீரோவாகவே உருவெடுத்து இருக்கிறார்.
“ ஷஷாங் சிங்கின் ஒவ்வொரு அடியும், என்னை நீங்கள் என்னை தவறாக எடுக்கவில்லை, சரியாக தான் எடுத்து இருக்கிறீர்கள் என்று நிரூபிக்கும் விதத்தில் நிச்சயம் இருந்தது என்றே கூறலாம். நிச்சயம் இன்னும் அவர் பஞ்சாப் அணிக்கு பலவெற்றிகளை தேடி தருவார் என்பதில் ஐயமில்லை “