உலகின் மிக மர்மமான நாட்ரான் ஏரி, அப்படி இங்கு என்ன தான் இருக்கிறது?
நாட்ரோன் ஏரி இங்கு இறக்கும் பறவைகள் அப்படியே சிலைகளாக மாறி விடும் என்று கூறுகின்றனர், பல விசித்திரமான அம்சங்களை கொண்ட இந்த ஏரியில் அப்படி என்ன தான் இருக்கிறது என்பதை இங்கு பார்க்கலாம்.
கிழக்கு ஆப்பிரிக்காவின் தான்சானியா நாட்டின் அருஷா பிரதேசத்தில் அமைந்து இருக்கும் இந்த நாட்ரோன் ஏரி பல விசித்திரங்கள் நிறைந்தது. பொதுவாகவே இந்த ஏரி உப்பு ஏரியாக பார்க்கப்படுகிறது. சகதிகள் எப்போதுமே நிறைந்து இருக்குமாம். வெப்பநிலை எப்போதுமே 40 டிகிடி செல்சியஸ்சிற்கு மேல் தான் இருக்குமாம். அதன் காரணமாகவே நீர் ஆவியாகி ஆவியாகி நீரில் உப்புதன்மை படிந்தே காணப்படும் என கூறப்படுகிறது.
எரிமலை குழம்புகளும் இந்த ஏரியில் கலக்கும் என கூறப்படுகிறது. அதன் காரணமாக இந்த ஏரி எப்போதுமே சிகப்பு நிறத்தில் தான் இருக்குமாம். இந்த நீர் மனிதர்கள்,விலங்குகள் குடிப்பதற்கோ, குளிப்பதற்கோ உகந்தது இல்லை என கூறப்படுகிறது. இந்த நீரில் PH லெவல் எப்போதுமே 12-க்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. நீர் மேனியில் பட்டாலே மேனியை அரித்து விடும் என கூறப்படுகிறது.
இது போக இந்த ஏரியில் பல மர்மமான மரணங்கள் நிகழ்ந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ஏரியில் இருக்கும் மீன்களொ, பறவைகளோ அப்படியே அதே இடத்தில் சிலைகளாக மாறி விடுமாம். இதற்கு அறிவியல் ரீதியான காரணம் என்பதி அதிகப்படியான கால்சிபிகேசன் என்று கூறப்படுகிறது. அதுவே அந்த இறந்த உடல்களை சிலை போல நிறுத்தி வைப்பதாக கூறுகின்றனர்
காரத்தன்மை அதிகம் கொண்ட இந்த ஏரி நீரில் ஒரு குறிப்பிட்ட வகை மீன்கள் மட்டுமே தங்களை தகவமைத்து இருக்க முடியும் என கூறப்படுகிறது. வலசை போதல் நிகழ்வின் மூலம் பூ நாரைகள் மட்டும் அதிகமாகஇங்கு வந்து செல்லும் என கூறப்படுகிறது.
“ பல விசித்திரங்கள் நிறைந்த இந்த ஏரியை, உலகின் மிக பயங்கரமான ஏரிகளுள் ஒன்றாக வரையறுக்கின்றனர் அறிவியல் ஆய்வாளர்கள் “