மகிழுந்துகளை தன்னை நோக்கி இழுக்கும் மாய காந்த மலை, அப்படி என்ன இருக்கிறது இந்த மலையில்?
இந்தியாவின் காஷ்மீர் அருகே இருக்கும் பகுதியான லே என்னும் இடத்தில், லடாக் நெடுஞ்சாலையில் ஒரு விசித்திரமான மலை ஒன்று இருக்கிறது. பொதுவாக அந்த பகுதியில் இருப்பவர்கள் இந்த மலையை காந்தமலை என்கின்றனர்.
அதாவது அந்த பகுதியில் செல்லும், நிற்கும் மகிழுந்துகளை, மற்றும் சில வண்டிகளை, இந்த மலை தன்னை நோக்கி இழுப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக மலைப்பகுதிகள் என்றாலே பள்ளங்களாக இருக்கும் அதனால் கூட வண்டிகள் நகரலாம் என்று நினைத்தால், மேட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் கூட 10 கி.மீ வரைக்கும் தானாக மலையை நோக்கி பயணித்து இருக்கிறதாம்.
அதன் காரணமாகவே இந்த பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட பார்க்கிங் ஏரியாக்கள் அமைத்து இருப்பார்களாம். சுற்றுலாக்கு வருபவர்களோ நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களோ குறிப்பிட்ட அந்த இடங்களில் மட்டும் தான் பார்க்கிங்கை மேற்கொள்ள அனுமதி உண்டாம். மற்ற இடங்களில் பார்க்கிங்கை மேற்கொண்டால் அது மலையை நோக்கி இழுக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
இந்த காந்தமலை கடல் மட்டத்தில் இருந்து 11,000 அடி உயரத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக மகிழுந்துகள் இந்த மலையை நோக்கி இழுக்கப்படுவதற்கு காரணம், இந்த மலை தனக்குள் தக்க வைத்து இருக்கும் அதிகப்படியான புவி ஈர்ப்பு புலம் என்று கூறப்படுகிறது. இன்னும் சில அறிவியலார்கள் இது ஒரு ஒளியியல் கண்மாயம் அதாவது ஆப்டிகல் இல்லுயூசன் என்கின்றனர்.
“ எதுவாகினும் இந்த உலகம் பல வித்தியாசமான நிலப்பரப்புகளை கொண்டு தான் இருக்கிறது என்பதை ஏற்று தான் ஆக வேண்டும், உணர்வுகளால் உணர முடிகின்ற, அறிவியலால் விளக்க முடியாத பல வித்தியாசமான விடயங்களை, இந்த ஞாலம் தன்னகத்தே கொண்டு இருக்கிறது என்பதில் எந்த ஐயமுமில்லை “