‘அன்று அமைதிகளம், இன்று அதிரடி களம் – சன்ரைசர்ஸ்சின் இந்த அதிரடி மாற்றத்திற்கு காரணம் என்ன? ‘
ஒரு காலத்தில் சன்ரைசர்ஸ் விளையாடும் போட்டி என்றாலே டிவியை ஆஃப் பண்ணி செய்து விடுவோம், ஏன் என்றால் நிச்சயம் அது ஒரு குறைந்த ஸ்கோர் மேட்ஸ் ஆக தான் இருக்கும். போட்டியில் விறு விறுப்பு இருக்காது, ஒட்டு மொத்தமாக டி20 போட்டி போலவே இருக்காது. பெரும்பாலும் சன்ரைசர்ஸ் ஒரு குறைந்த பட்ச ஸ்கோர் அடித்து விட்டு, அவர்களது சிறந்த பவுலர்களால் அதை டிபெண்ட் செய்வார்கள் அது தான் அவர்களின் பலமாக இருந்தது. இதே பார்முலாவை பல வருடங்களாக கடைப்பிடித்து ஒரு முறை சாம்பியன் பட்டத்தையும், மூன்று முறை ப்ளே ஆஃப், ஒரு முறை ரன்னர் அப் என்ற ஸ்டேஜையும் எட்டி இருக்கின்றனர்.
ஆனாலும் கடந்த 3 வருடங்களாக இந்த பார்முலா அவர்களுக்கு பலிக்கவில்லை, லீக் ஸ்டேஜ் உடன் வெளியேறியது தான் மிச்சம். இந்த நிலையில் சன்ரைசர்ஸ் நிர்வாகம், பாட் கம்மின்ஸ்சை ஏலத்தில் எடுத்து அவரை கேப்டன் ஆக்கியது. அவர் செய்த சில மாற்றங்களும் சன்ரைசர்ஸ்சை புதிய அணியாக உருவெடுக்க வைத்து இருக்கிறது. ஒரு காலத்தில் 160 ரன்கள் எடுக்கவே திணறும் சன்ரைசர்ஸ் இன்று ஒரே சீசனின் இரண்டு முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்து அதிரடி அணியாக வலம் வருகிறது.
ஒரிரு போட்டிகளிலேயே அணியின் பலம் எது வீக்னஸ் எது என்பதை உணர்ந்து அதை கட்டமைத்த பாட் கம்மின்ஸ், என்ன நடந்தாலும் அதை கூலாக எதிர்கொண்டு இக்கட்டான சூழலை கூட தன் அணிக்கு சாதகமாக மாற்றும் அவரின் தலைமை, நிச்சயம் இது சன்ரைசர்ஸ் அணிக்கு ஒரு விடிவு காலம் தான்.
“ சன்ரைசர்ஸ் அணியின் சூப்பர் ஸ்டாராக தற்போது வலம் வரும் பாட் கம்மின்ஸ், தனது கோப்பை லிஸ்ட்டில் ஐபிஎல் கோப்பையையும் சேர்த்து விடுவார் என நினைக்கிறேன் “