ஏன் ருதுராஜ் இல்லை, ஏன் புவி இல்லை, பெரிய இம்பேக்டே கொடுக்காத ஹர்திக்கை துணை கேப்டனாக்கி பிசிசிஐ அழகு பார்ப்பது ஏன்?
பிசிசிஐ டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்து இருக்கிறது.
ஸ்குவாட்: ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (WK), சஞ்சு சாம்சன் (WK), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.
இருப்பு வீரர்கள்: சுப்மான் கில், ரிங்கு சிங், கலீல் அகமது மற்றும் அவேஷ் கான்
பிசிசிஐ இந்த ஸ்குவாட் அறிவிப்பை வெளியிட்டதில் இருந்தே பல சர்ச்சைகள் கிளம்பி இருக்கிறது, ஐபிஎல் என்பது டி20 உலககோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் ஒரு முன்னதான சீசனாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்டு வரும் ருதுராஜ், நடராஜன், சந்தீப் ஷர்மா, ரியான் பராக், சீனியர் வீரர் புவனேஷ்வர் குமார் போன்றோர் அணியில் இல்லாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதே சமயத்தில் சில சீசன்களாகவே எந்த வித இம்பேக்ட்டும் ஏற்படுத்தாத சிராஜ், ஆல்ரவுண்டர் என்ற பெயரில் பொய்யாக உலவிக் கொண்டு இருக்கும் ஹர்திக் பாண்டியா, ஜெய்ஸ்வால், அக்சர் படேல் போன்றோர்கள் எல்லாம் ஸ்குவாடில் இருப்பது என்ன காரணத்தால் என்பது யாருக்குமே புலப்படவில்லை.
பும்ரா தவிர நம்பிக்கை தரும் டெத் பவுலிங் இல்லை, துபே தவிர நம்பிக்கை தரும் பெரிய மிடில் ஆர்டர் இல்லை. ரோஹிட் ஷர்மா தவிர பவர் பிளேவை மிகைப்படுத்தும் துவக்க ஆட்டக்காரர்களும் கண்ணுக்கு புலப்படவில்லை, இது எப்படி ஒரு வெற்றி தரும் ஸ்குவாட் என்பது யாருக்குமே நிச்சயமாக புலப்படவில்லை.
“ இது தான் ஸ்குவாட் என்றால் இன்னும் நாம் உலககோப்பைக்கு காத்து தான் இருந்தாக வேண்டும் என்பதில் ஐயமில்லை என பல இந்திய ரசிகர்களும் இணையத்தில் புலம்பி வருகின்றனர் “