அன்று சோற்றுக்கே வழி இருக்காது, யாராச்சு எங்காச்சு விளையாட கூப்பிட்டா பஸ்ல போக கையில காசு இருக்காது!
ஐபிஎல்-லில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வரும் நடராஜன் அதே அணியின் கேப்டன் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பவுலர் ஆன பாட் கம்மின்ஸ்சை விட சிறப்பாக பந்து வீசி 8 போட்டிகளில் 15 விக்கெட்டுக்களை வீழ்த்தி சன்ரைசர்ஸ் அணியின் முன்னனி பவுலராக திகழ்ந்து வருகிறார்.
சேலத்தில் கிரிக்கெட் என்ற பின் புலமே இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்தவர் தான் நடராஜன். மிகவும் ஏழ்மையான குடும்பம், ஒரு வேளை சோற்றுக்கு கூட மிகவும் கடினம், அப்படி ஒரு சூழலில் தான் நடராஜன் தனது கிரிக்கெட் பயணத்தை துவங்குகிறார். எங்காவது யாராவது கிரிக்கெட் விளையாட கூப்பிடும் போது பஸ்சில் ஏறி அந்த இடத்தை அடைய கூட அவரிடம் கையில் காசு இருக்காதாம். ஆனாலும் கூட அவரின் கிரிக்கெட் ஆர்வம் சோர்ந்து போகவில்லை.
அருகில் இருக்கும் ஸ்டேடியத்திலோ, லோக்கல் கிரவுண்டிலோ மேட்ஸ் ஏதும் நடந்தால் நடந்தே சென்று அந்த இடத்தை அடைவாராம். பெரும்பாலும் அவர் அறியப்பட்டது தமிழ்நாடு ப்ரீமியர் லீக் மூலம் தான். அங்கு அவர் சொருகிய யார்க்கர் தான் அவரை சர்வதேச கிரிக்கெட்டிற்கும் கொண்டு சென்றது. ஆஸ்திரேலிய சீரிஸ்சில் நெட் பவுலராக இணைந்த நடராஜனுக்கு அதிர்ஷ்டமாக அதே சீரிஸ்சில் ப்ளேயிங் 11 யில் விளையாடவும் இடம் கிடைத்தது. உலகின் நம்பர் 1 அணியாக அறியப்படும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அந்த சீரிஸ் முழுக்க தனது சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்.
அதற்கு பின் கொஞ்ச காலம் காயம் அவரை புரட்டி போடவே, பல சர்வதேச வாய்ப்புகள் பறி போனது. அதில் இருந்து மீண்டு வருவதற்குள் காலங்கள் ஓடி விட்டது. தற்போது நடக்கும் ஐபிஎல் தொடரில் பல முன்னனி பவுலர்களை விட சிறப்பாக பந்து வீசிய போதும் கூட, பிசிசிஐ இவரின் மீது கண் வைக்கவில்லை. டி20 உலககோப்பையில் இவருக்கும் இடம் கொடுக்கவில்லை.
“ தொடர்ந்து தனது திறமையை உலகளாவிய போட்டிகளில் நிரூபித்து வரும் நடராஜன் அவர்களை, பிசிசிஐ உலககோப்பை போன்ற போட்டிகளில் விளையாட வைத்து ஒரு அங்கீகாரம் கொடுத்து இருக்கலாம் “