சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று பாட்டியும் அண்ணாமலையும் சேர்ந்து குடும்பத்தினருக்கு ஒரு புது ஷாக் வைக்கிறார்கள். புதிதாக மாடியில் ஒரு அறை கட்டப் போகிறோம் எனக் கூறுகிறார்கள். அதற்கு மேலே ஒரு வீடு கட்டி விடலாமே என சுருதி கூறி அவரது தந்தை பணத்தை கொடுப்பார் என கூறுகிறார். அதற்கு முத்துவும் அண்ணாமலையும் கோபப்படுகிறார்கள். ரோகிணி ஒரு அறைக்கு பதிலாக இரண்டு அறை பெரிதாக கட்டி கூடவே ஒரு பாத்ரூமும் கட்டலாம் எனக் கூறுகிறார். மீனாவோ ஆடம்பர செலவு வேண்டாம் எனக் கூறுகிறார். அதற்கு விஜயா கிண்டல் செய்கிறார். கடைசியாக ஒரு வழியாக ரூம் கட்ட கடன் வாங்க வேண்டும் என்பதால் அந்தத் திட்டம் கைவிடப்படுகிறது. அதற்கு பதிலாக பாட்டி புதிதாக ஒரு திட்டத்தை கூறுகிறார். அதன்படி மூன்று ஜோடிகளில் ஒருவர் ஒரு வாரம் ஹால் இல்லையென்றால் மாடியில் உறங்க வேண்டும். இந்த வாரம் மனோஜம் ரோகினியும் ஹாலில் படுத்துக் கொள்ள அவர்கள் அறையை முத்து மீனா பயன்படுத்துவார்கள் என கூறுகிறார். அதற்கு மீனா அதெல்லாம் வேண்டாம் எனக் கூற மனோஜம் ரோகிணியும் அதற்கு மறுப்பும் தெரிவிக்கிறார்கள். விஜயா ரோகினி மற்றும் சுருதி இருவரும் பணக்கார வீட்டுப் பெண்கள் எனக் கூறுகிறார். எந்த வீட்டு பெண்ணாக இருந்தாலும் இங்கு வந்த பிறகு இங்கு இருக்கும் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என பாட்டி கூறுகிறார். ஒரு வழியாக முத்து மீனாவிற்கு தான் இந்த வாரத்திற்கு அறை என முடிவாகிறது.
இதற்கிடையில் மனோஜ் ரோகினி மனோஜின் நண்பர் மற்றும் வித்யா அனைவரும் வாங்கப் போகும் கடைக்கு போகிறார்கள். அங்கே வித்யா ரோகினியை பிராடு என கிண்டல் செய்கிறார். மனோஜின் பூங்கா நண்பர் மனோஜ் நினைத்தவாறு உட்கார்ந்து இடத்திலேயே சம்பாதிக்க போகிறார் எனக் கூறுகிறார். அதற்கு ரோகிணி சற்று கோபம் அடைகிறார். பின்னர் இரவில் அறையை விட்டுக் கொடுக்க முடியாது என மனோஜம் ரோகிணியும் பேசிக்கொண்டிருக்க, முத்து கதவைத் தட்டி அவர்களை வெளியே அனுப்புகிறார். அதற்கு மனோஜும் ரோகினி எரிச்சல் படுகிறார்கள்.