போன வருடம் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடம், இந்த வருடம் கையில் ஐபிஎல் கோப்பை!
கடந்த வருடம் ஐபிஎல் லீக் போட்டியின் முடிவில் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் இருந்த கொல்கத்தா அணி இந்த ஐபிஎல்லில் கோப்பையை தன் வசம் ஆக்கி இருக்கிறது.
பெரும்பாலும் யாருடைய வின்னிங் பிரடிக்சனிலும் கொல்கத்தா அணி இல்லை, அனைவரும் சிஎஸ்கே, மும்பை, ராஜஸ்தான் என கணித்துக் கொண்டு இருக்கும் போது சைலண்டாக சம்பவம் செய்து கோப்பையை நகர்த்தி இருக்கிறது கொல்கத்தா. அந்த அளவிற்கு பெரிய பவுலிங் யூனிட்டும் இல்லை, அந்த அளவிற்கு பெரிய பேட்டிங் யூனிட்டும் இல்லை, ஆனாலும் கவுதம் காம்பீர் மற்றும் கொல்கத்தா நிர்வாகம் அணியை பல வழிகளில் பலப்படுத்திக் கொண்டு இருந்தது.
என்ன தான் ரன்களை லீக் செய்தாலும் கூட ஸ்டார்க் மீது நம்பிக்கை வைத்து, அவரை இறுதிப் போட்டி வரை அணியில் வைத்து இருந்தது, சுனில் நரைனை துவக்க ஆட்டக்காரராக களம் இறக்கியது, ஹர்ஷித் ராணாவை தைரியமாக பவுலிங் செய்ய வைத்தது, நரைன் – வருண் காம்போவை தேவைப்படும் தருணங்களில் சரியாக உபயோகித்தது என கொல்கத்தா ஒவ்வொரு போட்டியிலும் கொல்கத்தா தங்களை பலப்படுத்திக் கொண்டே வந்தது. இறுதிப் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான அதிரடி ஹைதராபாத் அணியை அசாத்தியமாக தோற்கடித்து கோப்பையையும் கொல்கத்தா வென்று இருக்கிறது என்றால் அதற்கு முழுக்க முழுக்க காரணம் கொல்கத்தா அணிக்குள் இருந்த ஒரு சுதந்திரமும், அதற்கு உறுதுணையாய் இருந்தா அந்த அனி நிர்வாகமும் தான்.
“ காம்பீர் செய்த ஒரு சில மாற்றங்களும், கொல்கத்தா அணி நிர்வாகம் பிளேயர்களுக்கு கொடுத்த ஒரு சுதந்திரமும், கொல்கத்தாவிற்கு மூன்றாவது ஐபிஎல் கோப்பையை வாங்கி கொடுத்து இருக்கிறது என்றால் ஐயமில்லை “