மகாநதி சீரியல் இன்று கங்காவும் காவிரியும் தங்கள் சிறு வயது நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருக்கிறார்கள். காவேரி மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து திருப்தி அடைகிறார். விஜய் பின்னர் குமரனிடம் மகாநதி இல்லம் மிகவும் அழகாகவும் இந்த ஊரே மிகவும் ரம்யமாகவும் இருப்பதாக விஜய் கூறுகிறார். குமரனும் சிறுவயதில் இந்த வீட்டில் எப்பொழுதுமே சிரிப்பு சத்தம் தான் கேட்கும் எனவும் பசுபதி அந்த சிரிப்பை கொன்றுவிட்டார் எனவும் கூறுகிறார். பின்னர் உண்மை அறிந்த விஜய் இந்த வீட்டில் மீண்டும் சிரிப்பு சத்தம் கேட்கும் என உறுதி அளிக்கிறார்.
அந்த சமயத்தில் காவேரி அவர்கள் இருவரையும் உணவருந்த அழைக்கிறார். உணவு மிகவும் அருமையாக இருப்பதாக கங்காவை விஜய் பாராட்டுகிறார் நடுவில் குமரன் விஜய்க்கு திமிரு இல்லை என கங்காவிடம் கூறுகிறார். கங்கா தன்னை திமிர் பிடித்தவர் எனக் கூறி இருப்பதை அவருடைய அபிப்ராயம் என விஜய் ஏற்றுக் கொள்கிறார்.
நடுவில் நிவின் யமுனாவை பார்த்து கோபப்பட யமுனா மன்னிப்பு கேட்கிறார். ஆனாலும் நிவின் மனம் இறங்கவில்லை. யமுனா மனம் உடைந்து ரோட்டில் நடந்து செல்கிறார். கடைசியாக காவிரியை விஜய் ஒரே அறையில் தூங்க வேண்டாம் என வம்பு இழுக்கிறார். குமரனோ கங்காவை பார்ப்பது எப்படி என பயப்படுகிறார். கங்கா குமரனிடம் இப்பொழுதாவது அந்த ரகசியத்தை கூறினீர்களே எனக் கூறி மன ஆறுதல் அடைகிறார்.