முத்துவின் புது முடிவு! Siragadikka Aasai today episode 30th May 2024

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று விஜயா மீனாவை எப்பொழுதும் போல் அவமானப்படுத்துகிறார். மீனா தரையில் பாய் விரித்து தூங்க ரோகினியும் விஜயாவும் கட்டிலில் உறங்குகிறார்கள். முத்து அதே போல் கீழே பாய் விரித்து தூங்க கட்டில் அண்ணாமலையும் மனோஜ் உறங்குகிறார்கள். முத்து வேண்டுமென்றே மனோஜை பற்றி காக்கா கதை கூறி மனோஜை உறங்கவிடாமல் செய்கிறார். ரோகினி கோ விஜயாவின் குரட்டை சத்தம் பாடாகப்படுத்தி எடுக்கிறது. அதனால் அவரும் தூங்க முடியாமல் ஹாலுக்கு வருகிறார் அங்கே மனோஜம் இருப்பதை பார்த்து இருவரும் தங்கள் நிலையை எண்ணி புலம்புகிறார்கள்.

காலையில் மீனாவால் சீக்கிரமாக விழிக்க முடியவில்லை, ஆனால் அவரின் உடல் நலனை பற்றி சற்றும் கவலைப்படாமல் மனசாட்சி இல்லாமல் விஜயா அவரை திட்டுகிறார். மனோஜ் ரோகினி சுருதி ரவி அனைவரும் வந்து விட மீனா மட்டுமே சமைக்க வேண்டுமா என முத்துவும் அண்ணாமலையும் கேட்கிறார்கள். அது அவளது துறை தானே என ரோகினி கூறுகிறார். ஒரு கட்டத்தின் மேல் அனைவரும் ஹோட்டலில் சாப்பிடுகிறோம் என சென்று விட விஜயா கடுப்பாகிறார். முத்து இனிமேல் மீனா மற்றவர்களுக்கு சமைக்க மாட்டார் எனக் கூறுகிறார். ஆனாலும் மீனா சற்றே வெட்கமின்றி மீண்டும் சமைக்க செல்ல முத்து அதெல்லாம் வேண்டாம் எனக்கூறி உனக்கு உடல்நிலை இன்னும் சரியாகவில்லை நாம் மருத்துவமனைக்கு செல்லலாம் என கிளம்புகிறார்கள்.

https://youtu.be/cF-t0UBF4v0
Siragadikka Aasai today episode video review 30th May 2024

About Author