கடும் வெப்ப அலையால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைப்பு!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிலவும் கடும் வெப்ப அலையால் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
கடும் வெப்ப அலை தேசம் எங்கும் வீசி வருவதால், தேசமே ஸ்தம்பித்து நிற்கிறது. கோடை விடுமுறை முடிந்து ஜூலை 6 பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக கல்வித்துறை அறிவித்து இருந்த நிலையில், வெப்ப அலை இன்னும் ஓயாததால் பள்ளிகள் திறப்பை ஜூலை 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து இருக்கிறது. புதுச்சேரியில் ஜூலை 12 பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்து இருக்கிறது.
“ வட மாநிலங்களில் பள்ளி மாணவர்கள் ஒரு சிலர் வெப்ப அலையால் மயக்கத்திற்கு உள்ளானதால் பள்ளிகள் திறப்பு ஒரு சில மாநிலங்களில் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது “