சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று ரோகினியின் கனவில் க்ரிஷ் வருகிறார். பதறிப் போய் அவர் வெளியே வந்து பார்த்தால், மீனாவுடன் க்ரிஷ் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து எரிச்சல் அடைகிறார். காலையில் அவர் அவரது தோழி வித்யாவிற்கு தொலைபேசியில் அழைத்து, கிருஷையும் தன் தாயையும் இந்த வீட்டிலிருந்து அனுப்ப ஒரு திட்டம் போடுகிறார். பின்னர் மீனாவிடம் வேலைக்கு செல்ல வில்லையா என கேட்டால் மீனா இன்று விடுமுறை எடுத்து வந்தவர்களை கவனித்துக் கொள்ள போவதாக கூறுகிறார்.
பின்னர் வித்யா மீனாவை அழைத்து தனக்கு ஒரு உதவி செய்யுமாறு கேட்கிறார் தனது அப்பார்ட்மெண்டில் பூ வேகமாக கட்டும் போட்டி இருப்பதாகவும் அதற்கு தனக்கு பூ கட்ட சொல்லித் தரவும் கேட்கிறார். முதலில் யோசிக்கும் மீனா பின்னர் ஒத்துக் கொள்கிறார். அவர் வித்யாவை பார்க்க செல்கிறார் இதில் ஏதோ சந்தேகம் இருக்கிறது வேண்டாம் என முத்து மறுத்தாலும் மீனா கேட்கவில்லை. ஸ்ருதியும் ரவியும் அவர்களது வேலைக்கு செல்கிறார்கள் பின்னர் ரோகினி விஜயாவிடம் நாம் அனைவரும் அவரவர் வேலையை செய்தார் தர்ம சங்கடமாகி வந்தவர்கள் சென்று விடுவார்கள் என கூறுகிறார். அதை நம்பி விஜயா அண்ணாமலையை அழைத்துக் கொண்டு கோயில் வேண்டுதல் என வெளியே செல்கிறார். முத்துவும் ரோகிணியும் மட்டுமே இப்பொழுது வீட்டில் இருக்கிறார்கள் ரோகிணி எப்படி முத்துவை அனுப்புவது என யோசிக்கிறார்.