CWC | Season 5 | ’உண்மையில் இந்த சீசன் எப்படி இருக்கிறது?’
குக் வித் கோமாளி சீசன் 5 கிட்டதட்ட 7 வாரங்களை கடந்து இருக்கும் நிலையில், இந்த சீசன் உண்மையில் ரசிகர்களை ஈர்த்து இருக்கிறதா என்பதை பார்க்கலாம்.
கிட்ட தட்ட நான்கு சீசன்களாக வெற்றி நடை போட்டுக் கொண்டு இருந்த குக் வித் கோமாளி, இந்த ஐந்தாவது சீசனில் சற்றே கொஞ்சம் சறுக்கி இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமாக வெங்கடேஷ் பட் அவர்கள் நிகழ்ச்சியை விட்டு விலகியதும் ஒரு காரணம் என்று சொல்லலாம். என்ன தான் மாதம்பட்டி ரங்கராஜ் வெங்கடேஷ் அவர்களை ரீப்ளைஸ் செய்து இருந்தாலும் கூட, பட் அவர்களிடம் இருந்த ஒரு பஃன் பேக்டர் ரங்கராஜ் அவர்களிடம் ரொம்பவே மிஸ்சிங் தான்.
அதற்கு அடுத்தபடியாக கோமாளிகள் எடுத்துக் கொண்டால், அதிலும் பெண் கோமாளிகளை எடுத்துக் கொண்டால் அனைவருமே ஹாசினி வேடம் போட்டு திரிகின்றனர். ஆண் கோமாளிகளில் குரேஷி தவிர யாரிடம் இருந்தும் பெரிதாக காமெடிகள் வருவதில்லை, ராமர் அவர்களுக்கு ஒரு சரியான ஸ்பேஸ் இல்லை என்றே சொல்ல வேண்டும், புகழ் வழக்கம் போல பெண்களை வைத்து ஸ்கோர் செய்தாலும் அது போர் அடிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
கோமாளிகள் செய்யும் காமெடியை விட, குக் ஷாலின் சோயாவின் இன்னசன்ட் சற்றே சிரிக்க வைக்கிறது. இத போட்டேன் அத போட்டேன் இப்படி ஒன்னு வந்திடுச்சு என எதையாவது செய்து விட்டு அவர் உளறுகின்ற மலையாளம் கலந்த தமிழ் சற்றே ரசிக்க வைக்கிறது. ஆனாலும் அவர் ஒரு குக்காக ஜொலிக்கிறாரா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும், பேசாமல் அவரை கோமாளியாக வேண்டுமானால் டெலிவிஷன் ரிக்ருட் செய்து இருக்கலாம்.
“ பொதுவாக இந்த சீசனில் மற்ற சீசன்களில் இருந்த ஒரு விறு விறுப்பும், காமெடியும் சற்றே கம்மி தான், சுவாரஸ்யத்திற்காக அவர்கள் செய்த சின்ன சின்ன மாறுதல்கள் எல்லாம் வியக்க வைக்கவில்லை, அதே பாட்டனில் தொடர்ந்து செல்வது போல இருப்பதால் தொடர்ந்து பல சீசன்களை பார்த்து வருபவர்களுக்கு நிச்சயம் ஒரு போர் சீசன் தான் “