அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவின் காலிறுதியில் ஜப்பானின் அகனே யமகுச்சியை எதிர்கொண்ட இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அவரை நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி இந்தியாவிற்கு மற்றுமொறு பதக்கத்தை உறுதி செய்தார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் காலிறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து ஜப்பானின் அகனே யமகுச்சியை எதிர்கொண்டார். தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து 21-13,22-20 என்ற நேர் செட்கணக்கில் யமகுச்சியை எளிதாக வீழ்த்தினார். இதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறி இந்தியாவிற்கு மற்றுமொறு பதக்கத்தை பி.வி.சிந்து உறுதி செய்தார்.

ஏற்கனவே 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றிருந்த பி.வி.சிந்து இந்த ஒலிம்பிக்கிலும் இந்தியாவிற்கான பதக்கத்தை உறுதி செய்துள்ளார். வருகின்ற சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதிச்சுற்றில் சீனாவின் சென்யூபையையுடன் மோதுகிறார் இந்தியாவின் பி.வி.சிந்து.

” சிங்கப்பெண்களின் பதக்க வேட்டைகள் தொடரட்டும் “

About Author