தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்திற்கு மேக மூட்டத்துடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
“ தென் தமிழகத்தை அக்னி வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே பெய்து வரும் மழை, நிலத்தின் அனல் வெப்பத்தை சற்றே தணித்து இருக்கிறது “