இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனோ பாதிப்பு மூன்றாவது அலை நெருங்குகிறதா….?
இந்தியாவில் படிப்படியாக குறைந்து வந்த தினசரி கொரோனோ பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது மீண்டும் உயர்ந்து வருகிறது. இதனால் மூன்றாவது அலை நெருங்குகிறதோ என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தரவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனோ பாதித்தவர்களின் எண்ணிக்கை 44,230 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய ஒரு நாளில் மட்டும் கொரோனோ தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 555 ஆக உள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் தொற்று பாதிப்பு இருபத்தி இரண்டாயிரத்தை கடந்துள்ளது. ஒட்டு மொத்தமாக 45 கோடி பேர் இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில் தற்சமயம் தடுப்பூசி செயல்பாடுகளை மாநில அரசுகள் மந்தப்படுத்தி வருகின்றன. பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி மையங்களே கலைக்கப்பட்டு விட்டன. இந்த நிலை நீடித்தால் பாதிப்புகள் மென்மேலும் அதிகரித்து மூன்றாம் அலைக்கே வழி வகுக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
“ தனிமனித இடைவெளி,முகக்கவசம் அணிதல்,தன்நலன் கருதி தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் இவற்றை நாட்டின் ஒவ்வொரு தனிமனிதனும் கடைப்பிடித்தால் மட்டுமே இந்த கொரோனோ என்னும் பெருந்தொற்றை நாட்டிலிருந்து விரட்டியடிக்க முடியும்”