இன்று நண்பர்கள் தினம்…!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் ஞாயிறு நண்பர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் இன்று (ஆகஸ்ட் 1) இந்தியாவில் நண்பர்கள் தினம்.

ஒரு குழந்தைக்கு அதன் அம்மாவின் பாசம் தெரியும், ஒரு இளைஞனுக்கு இன்னொரு இளைஞியின் காதல் தெரியும், வயது முதிர்ந்த ஒருவருக்கு தன் மனைவியின் அன்பு தெரியும். குழந்தை,இளைஞன்,வயது முதிர்ந்தவர்கள் என்று இந்த  மூவருக்கும் பொதுவாய் ஒன்று தெரியும் என்றால் அது நட்பாக தான் இருக்கும். இங்கு நட்பு மட்டுமே இத்துனோண்டு வயதையும் பிணைக்கும் எட்டமுடியா வயதையும் பிணைக்கும்.

எல்லா உறவுகளுக்கும் இங்கு தனி தனி இலக்கணம் உண்டு. ஆனால் எவ்வித இலக்கணமும் இன்றி ‘ஹாய்’ என்ற ஒரு வார்த்தையிலேயே ஆரம்பித்து விடுவது தான் இந்த நட்பு. ஒரு முறையோ இரு முறையோ, ஒருவரையோ இருவரையோ தான் இங்கு காதல் செய்ய முடியும். ஆனால் நட்பில் இந்த வரையறை இல்லை. அது வரையறை வைத்து அன்பு செய்வதும் இல்லை.

“ காதல் இல்லாதவனைக்கூட காட்டி விடலாம், ஆனால் இங்கு நட்பில்லாதவன்/நட்பில்லாதவள் எவரும் இலர் “

                                இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

About Author