கோல்ப் விளையாட்டில் பதக்கம் பெறுகிறதா இந்தியா? – டோக்கியோ ஒலிம்பிக் 2020
டோக்கியோ ஒலிம்பிக் 2020 மகளிர் கோல்ப் ஆட்டத்தில், நடந்து முடிந்த மூன்று சுற்றுகளின் முடிவில் இரண்டாவது இடத்தை பிடித்து சில்வர் வெல்லும் வாய்ப்பில் நிற்கிறார் இந்திய கோல்ப் வீரர் அதிதீ அசோக்.
மகளிர் கோல்ப் பிரிவில் மூன்று சுற்றுகளின் முடிவில் அமெரிக்காவின் நெல்லி கொர்டாவிற்கு பிறகு இரண்டாவது இடத்தில் அதிதீ அசோக் தொடர்ந்து சில்வர் வெல்லும் வாய்ப்பில் இருக்கிறார். தொடர்ந்த வானிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது ஆட்டம் தடைபடுகிறது. இறுதிச்சுற்றிலும் மோசமான வானிலை தொடருமானால் இந்தியாவிற்கு மற்றுமொரு வெள்ளியை பெற்றுத்தந்து விடுவார் அதிதீ அசோக்.
” இந்த தொடரில் அதிதீ அசோக் பதக்கத்தை பெறுவாராயின், கோல்ப் ஆட்டத்தில் இந்தியா ஒலிம்பிக்கில் பெறும் முதல் பதக்கம் இதுவாக இருக்கும், வென்று வாருங்கள் அதிதீ அசோக் “