சொகுசு கார் வழக்கு: 48 மணி நேரத்திற்குள் வரியை செலுத்த வேண்டும் நடிகர் தனுஷ்சிற்கு நீதிமன்றம் கெடு

சொகுசு கார் வழக்கில் நடிகர் தனுஷ் அடுத்த 48 மணி நேரத்திற்குள் காருக்கான மீதி 50 சதவிகித வரியை செலுத்தியாக வேண்டும் என கெடு விதித்துள்ளது நீதிமன்றம்.

நடிகர் தனுஷ் 2015 ஆம் ஆண்டு வெளி நாட்டிலிருந்து வாங்கிய சொகுசு காருக்கு ரூபாய் 60.66 லட்சம் நுழைவு வரி விதிக்கப்பட்டது. இந்த நுழைவு வரியை எதிர்த்து நடிகர் தனுஷ் தரப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. கடந்த ஐந்து வருடமாக நடைபெற்ற இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் அமர்வு விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது “ சாமானியன் வாங்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் கேள்விகளை கேட்காமல் வரிகளை செலுத்துகிற போது நடிகர்கள் மட்டும் வாங்கும் சொகுசு கார்களுக்கு வரிகுறைப்பு கேட்பது என்ன நியாயம் “ என்று கடுமையாக சாடினார். மேலும் நடிகர் தனுஷ் இன்னும் 48 மணி நேரத்திற்குள் ஏற்கனவே செலுத்திய வரி 50 சதவிகிதம் போக மீது 50 சதவிகித வரியை செலுத்தியாக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

” ஒரு சாமானியன் தினமும் தான் வாங்கும் ஒரு ரூபாய் தீப்பெட்டிக்கே பத்து சதவிகிதத்திற்கும் மேல் வரியை கேள்வி கேட்காமல் செலுத்துகிறான். ரூபாய் ஏழு கோடி மதிப்பிலான காருக்கு, வெறும் ஒன்பது சதவிகிதம் வரியை செலுத்துவதில் வரி குறைப்பை எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் தான் இருக்கிறது…? என்பதே இங்கு பல்வேறு சாமானியனின் கேள்வியாக இருக்கிறது ”

About Author