கோவாக்சின்,கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து போட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் நடத்திய ஒரு ஆய்வில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து போட்டவர்களுக்கு கொரோனோவிற்கு எதிரான நோய் தடுப்பாற்றல் பெருகி உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதாவது முதல் தவணையில் ஒரு தடுப்பூசியும் இரண்டாவது தவணையில் மற்றுமொரு தடுப்பூசியும் எடுத்துக்கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பெருகி இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் ஒரு பிரிவினர் முதல் தவணையாக கோவாக்சினும் தவறுதலாக இரண்டாவது தவணையில் கோவிஷீல்டும் எடுத்துக்கொண்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய ஆய்விலேயே இத்தகைய ஆச்சர்யமான முடிவு கிடைத்துள்ளது. அவ்வாறு மாற்றி தடுப்பூசியை எடுத்துக்கொண்ட அனைவருக்கும் கொரோனோவிற்கு எதிரான நோய் தடுப்பாற்றல் பெருமளவில் உடலில் உருவாகி இருப்பதாக ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது .
” முதலில் தடுப்பூசியை கலந்து உபயோகித்தால் ஏதேனும் பாதிப்புகள் உடலுக்கு நேரிடும் என்று அரசே அறிவித்திருந்த நிலையில் தற்போது ஆய்வின் முடிவில் கிடைத்திருக்கும் ஆச்சரிய முடிவுகள், ’பற்றாக்குறைக்கு இரண்டு தவணைகளுக்கு எந்த தடுப்பூசிகள் வேண்டுமானாலும் மாற்றி செலுத்திக்கொள்ளலாம்’ என்ற தைரியத்தை மக்களுக்கும் அரசுக்கும் கொடுத்துள்ளது “