ஏழு பதக்கங்களுடன் ஒலிம்பிக்கை நிறைவு செய்கிறது இந்தியா!
ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலம் என்று மொத்தம் ஏழு பதக்கங்களுடன் டோக்கியோ ஒலிம்பிக்கை நிறைவு செய்திருக்கிறது இந்தியா. இதற்கு முன்னர் ஒலிம்பிக்கில் அதிகபட்சமாய் ஆறு பதக்கங்கள் பெற்றதே சாதனையாக இருந்த நிலையில் இந்த ஒலிம்பிக்கில் அதை பின்னுக்கு தள்ளி ஏழு பதக்கங்களை பெற்றிருக்கிறது இந்தியா.
இந்தியா பெற்ற ஏழு பதக்கங்கள்
1) மீரா பாய் சானு – சில்வர் (49 கிலோ பிரிவு பளுதூக்குதல்)
2) ஆடவர் ஹாக்கி அணி – வெண்கலம்
3) பி வி சிந்து – வெண்கலம் (மகளிர் பேட்மிண்டன்)
4) லவ்லினா – வெண்கலம் (மகளிர் வெல்டர் வெயிட் பாக்சிங்)
5) ரவிக்குமார் தாஹியா – சில்வர் (57 கிலோ பிரிவு ஆடவர் ரெஸ்லிங்)
6) பஜ்ரங் புனியா – வெண்கலம் (65 கிலோ ஆடவர் ப்ரீ ஸ்டைல் ரெஸ்லிங்)
7) நீராஜ் சோப்ரா – தங்கம் (ஆடவர் ஈட்டி எறிதல்)
“ இன்று பதக்கம் உயர்ந்திருக்கிறது, நாளை தங்கமும் உயரும்,தரமும் உயரும் உலக அரங்கில் ஓயாது ஒலிக்கும் எங்கள் தேசிய கீதம் ”