கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 32,937 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று, 417 பேர் தொற்றுக்கு பலி
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 32,937 பேர் புதியதாக கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாகவும், 417 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளதாகவும் இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை விடுத்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் மொத்த பலி எண்ணிக்கை 4,31,642-ஆக உயர்ந்து உள்ளது.
நேற்றைய ஒரு நாளில் மட்டும் 17 லட்சம் பேருக்கு கொரோனோ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் ஒட்டு மொத்தமாக இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 54.58 கோடியாக உயர்ந்துள்ளது. ஒரு நாளில் 32,937 பேர் கொரோனோவிற்கு அனுமதிக்கப்பட்டிருந்தாலும் அதை விட அதிகமானோர் குணமாகியும் வீடுதிரும்பியுள்ளனர். நேற்றைய ஒரு நாளில் இந்தியாவில் குணமானோர் எண்ணிக்கை மட்டும் 35,909-ஆக உள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் ஓட்டு மொத்த கொரொனோ மீட்பு விகிதம் 97.46 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. சிலநாட்களாகவே இந்தியாவில் பாதிப்பு விகிதம் குறைந்தும் மீட்பு விகிதம் அதிகமாகியும் வருகிறது. இது ஒரு நல்ல சூழலுக்கான அறிகுறி என்றாலும் அடுத்தடுத்து வருகின்ற விழாக்கள் பண்டிகைகளுக்கு இந்த மீட்பு விகிதங்களை பயன்படுத்தி கட்டுப்பாட்டை தளர்த்தி சுதந்திரமாக மக்களை செயல்பட விட்டால் மீண்டும் கொரோனோ தீவிரம் எடுக்கவும் வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.
“ கூட்டங்களோடு விழாக்கள், பண்டிகைகள் கொண்டாட்டத்தை சிறிது காலத்திற்கு தள்ளிப்போடுங்கள் இல்லையெனில் இந்த கொரோனோ என்னும் சூழல் நம்மை இன்னும் பல காலத்திற்கு அத்தகைய கொண்டாட்டங்களுக்கு வழிவகை இல்லாமலே செய்துவிடும் “