வருகிறது இந்தியாவின் முதல் டி.என்.ஏ தடுப்பூசி சைக்கோவ்-டி

ஏற்கனவே கோவாக்சின்,கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி வகைகளுக்கு அனுமதி அளித்திருந்த மத்திய அரசு தற்போது டி.என்.ஏ தடுப்பூசியான சைக்கோவ்-டி என்ற தடுப்பூசிக்கும் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது. இது டெல்டா வகை கொரோனோ வைரஸ்க்கு எதிராக 66 சதவிகிதம் போராடக்கூடியது என்று அந்த தடுப்பூசியை உருவாக்கிய கெடிலா நிறுவனத்தின் நிறுவனர் தெரிவித்து வருகிறார்கள்.

பெரும்பாலான தடுப்பூசிகள் இரண்டு தவணையாக மட்டுமே செலுத்தப்பட்டு வரும் நிலையில் சைக்கோவ்-டி மூன்று தவணையாக செலுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறி வருகின்றனர். இந்தியாவிலேயே அதிகபட்சமாக 18 வயதினருக்கு கீழ் உள்ள 1000 பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு சைக்கோவ்-டி-யை சோதித்து அதற்கான நேர்மறையான ரிசல்ட்டுகளையும் ரிப்போர்ட்களையும் கெடிலா நிறுவனம் பெற்றுள்ளது.

இதன் மூலம் அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சைடஸ் கேடிலா நிறுவனம் தான் தயாரித்திருந்த சைக்கோவ்-டி என்ற தடுப்பூசிக்கு கடந்த ஆகஸ்ட் 1 அன்று இந்திய மருந்துகள் கட்டுப்பாடு நிறுவனத்திடம் அவசர பயன்பாட்டிற்காக அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது இந்திய அரசு அந்த விண்ணப்பத்தை பரிசீலித்து சைக்கோவ்-டி தடுப்பூசிக்கு அனுமதியும் அளித்துள்ளது.

“ இந்தியாவில் கொரோனோவிற்கு எதிரான முதல் டி.என்.ஏ தடுப்பூசி என்பதாலும் 66 சதவிகிதம் டெல்டா வகை கொரோனோ வைரஸ்சை ஆட்டிப்படைக்கும் திறன் உள்ளது என்கிற ஆய்வுகளையும் கொண்டு பார்க்கையில் சைக்கோவ்-டி நல்ல ஆற்றல் திறன் கொண்டதே என்ற முடிவுக்கு வந்தாலும் பக்க விளைவுகள் பற்றி எந்த அறிவிப்பும் அவர்களிடமிருந்து இல்லை. அது இது என்று ஆயிரம் சொல்லுவார்கள் அதையெல்லாம் காதில் வாங்கி கொள்ளாமல் நேரடியாக தடுப்பூசி முகாம்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் “

About Author