கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 31,043 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று, 401 பேர் தொற்றுக்கு பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,043 பேருக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 401 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளதாகவும் இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்த இறப்பு 4,34,399-ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து ஒரு பக்கம் குறைந்து வரும் கொரோனோ தொற்று, ஒரு பக்கம் உயர்ந்து வரும் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை என்று நேர்மறையாக திரும்பி இருக்கிறது இந்தியாவில் கொரோனோவின் நிலை. இதுவரை இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 58 கோடியை கடந்துள்ளது. இந்தியாவில் நூற்றுக்கு 43 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 33.5 சதவிகிதமாக இருந்தாலும் இரண்டாவது தவணையும் சேர்த்து செலுத்திக்கொண்டவர்கள் எத்தனை பேர் என்று கணக்கீடு எடுத்துப்பார்த்தால் வெறும் 9.5 சதவிகிதம் பேர் மட்டுமே எடுத்திருக்கின்றனர்.

“ இரண்டு தவணையாக தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களால் மட்டுமே குறைந்தது 60 சதவிகிதம் ஆவது டெல்டா வகை கொரோனோ தொற்றை எதிர் கொள்ள முடியும் என்ற நிலையில் வெறும் 9.5 சதவிகிதம் பேர் மட்டுமே இரண்டு தவணையாக இந்தியாவில் இரண்டு தவணையும் தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்கள். சின்ன சின்ன பக்க விளைவுகளுக்கு பயந்து இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்வதை விட்டு விடாதீர்கள். இப்போது நார்மல் என்றிருக்கும் இந்த நிலை எப்போது வேண்டுமானாலும் சீரியஸ் என்ற நிலைக்கு மாறலாம். உஷாராக இருங்கள் “

About Author