நாம் இருவர் நமக்கு இருவர் இன்று 25.08.2021

நாமிருவர் நமக்கிருவரில் இன்று மாறன் டீல் பேசவந்த மாசாணியின் மூக்கை உடைத்து கிண்டல் செய்து திருப்பி அனுப்பி விட்டார்.

இன்னொரு பக்கம் ரத்னவேல் மாமா மாயனை, சாரதாவை சந்திக்க வருமாறு மீண்டும் மீண்டும் அழைக்க மாயன் மறுத்துவிடுகிறார். ரத்னவேலும் மகாவும் சாரதாவை சந்திக்க செல்கிறார்கள். சாரதா மாயன் தன்னை காணவராததை குறித்து மிகவும் கவலைப்பட, மகாவை பார்த்த பிறகு மகிழ்ச்சி அடைகிறார். மகா கர்ப்பமாக இருக்கும் செய்தி அறிந்த பின் மகாவிற்கு நிறைய நகைகளை கொடுக்கிறார். மகனிடம் தனக்காக பேசுமாறு கோரிக்கையும் விடுகிறார்.

பின்னர் மாறன் சாரதாவின் நடவடிக்கைகளை குறித்து கவலைப்பட, “மாயனுக்கு இன்னும் சிறிது நேரம் கொடுப்போம் கண்டிப்பாக என் மகள் என்னை பார்க்க வருவான்” என சாரதா கூறுகிறார். நாச்சியார் குடும்பத்தை மாயன் தன்னிடம் வந்து சேரும் வரை எதுவும் செய்ய வேண்டாம் என்றும் பேசுகிறார்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

About Author