கே.டி.ராகவனின் சர்ச்சை வீடியோவை வெளியிட்ட மதன் பாஜகவிலிருந்து நீக்கம்

தமிழக பாஜக பொதுச்செயலாளராக பதவி வகித்த கே.டி.ராகவன் குறித்த ஒரு சர்ச்சையான வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து நேற்று கே.டி.ராகவன் தனது பொறுப்பை ராஜினாமா செய்த நிலையில் அந்த வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன், பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக, அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் அறிக்கை விடுத்துள்ளார்.

கே.டி.ராகவன் குறித்த பாலியல் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று இரு தினங்களுக்கு முன் பத்திரிக்கையாளர் மதன் ரவிச்சந்திரன் அவர்களால் இணையத்தில் வெளியிடப்பட்டது. அது அனைத்து சமூக வலை தளங்களிலும் வைரலான நிலையில், அந்த வீடியோ புனையப்பட்டது என்றும் சட்ட ரீதியாக அதை வெளியிட்டவர்களை சந்திக்க உள்ளேன் அது வரையில் என் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றும் கே.டி.ராகவன் தனது அறிக்கை ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, கட்சியின் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணாக செயல்பட்டதாக கூறி, அந்த வீடியோவை வெளிட்ட மதன் ரவிச்சந்திரன் இன்று பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கப்படுவதாக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். ஒரே நேரத்தில் இரு வேறு அறிவிப்புகள் வெளியானதில் இருந்து பாஜக களத்திலும்ம சமூக வலைதளங்களிலும் விவாதங்கள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன.

“ சர்ச்சைகள், மாறுதல்கள், அறிக்கைகள் என்று எப்போதும் சூடான ஒரு களத்திலேயே நிற்பதற்கு பெயர் தான் தேசிய கட்சிகள் போல என்று சமூக வலைதளங்கள் சலசலத்து வருகின்றன “

About Author