கேரளத்தில் ஒரே நாளில் 31,445 பேருக்கு கொரோனோ தொற்று

கேரளத்தில் தொடர்ந்து உயர்ந்து வந்த கொரோனோ தொற்று இன்று புதிய உயரத்தை தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 30,000-க்கும் அதிகமான பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளத்தில் இன்று ஒரே நாளில் 31,445 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் மட்டும் 215 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி கேரளாவில் 19,972-ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்படும் விகிதமும் 19.03 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

நாளுக்கு நாள் குறித்த ஒரு மாநிலத்தில் மட்டும் தொற்று எண்ணிக்கை அதிகமாய் இருக்கிறதெனில் மற்ற மாநிலங்கள் எல்லாம் கொரோனோ தொற்றை குறைத்து காண்பிக்க முற்படுகின்றனவா? இல்லையேல் கேரள அரசு தொற்றுக் கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடிப்பதில்லையா? தினம் தினம் அரசு தரப்பில் கொடுக்கும் தரவுகளில் மக்களும் சரி மருத்துவ வல்லுநர்களும் சரி குழம்பி போயே இருக்கின்றனர்.

“தரவுகள் சரியாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை தீர்வு செய்ய முடியும். இங்கு தரவுகளே சரியாக இல்லையெனில் எடுக்கும் நடவடிக்கைகளில் குழறுபடி ஏற்படும் மீண்டும் அது மிகப்பெரிய விளைவுகளை விதைக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர் “

About Author