கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 46,397 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 46,397 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 608 பேர் ஒரே நாளில் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,36,396-ஆக உயர்ந்துள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கையும் 59 கோடியை கடந்துள்ளது உள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரையில் 100 பேருக்கு 44.17 பேர் தடுப்பூசி எடுத்துக்கொள்கின்றனர்.

உலகளாவிய அளவில் ஒரு நாளில் புதியதாக தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3,32,695-ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்றினால் இறப்பை எய்தியவர்களின் எண்ணிக்கை 6,296-ஆக உள்ளது. தொற்றினால் உலகம் முழுக்க ஏற்படும் இறப்பில் கிட்ட தட்ட 10 சதவிகிதம் இறப்பு இந்தியாவில் நிகழ்கிறது. கொரோனோ தீவிரமடைகிறதோ இல்லை இப்படியே நிலை கொள்கிறதோ அது கணிக்க முடியாத ஒன்றாகிறது.

ஆயினும் பரவல் என்பது தனி ஒரு மனிதனால் இந்த சமூகத்தில் நிகழக்கூடியது. தனிமனித கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தினால் மட்டுமே பரவல் என்பது குறைவதை சாத்தியப்படுத்தி விட முடியும். மூன்றாவது அலையை நெருங்கி கொண்டிருக்கிறோம். இயல்பு நிலைக்கு இப்போதே திரும்பிட வேண்டாம் விளைவுகள் பெரியதாகிவிடும் என்று தொடர்ந்து மருத்துவ வல்லுநர்கல் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

“ முகக்கவசம் அணியுங்கள் சமூக இடைவெளியை முறையாக கடை பிடியுங்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் தனி ஒரு மனிதனாய் உங்களால் முடிந்த அளவிற்கு இந்த சமூகத்திற்குள் பரவலை கட்டுப்படுத்திடுங்கள் “

About Author