காபூலில் தற்கொலைப்படை தாக்குதல்: 72 பேர் பலி,140-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஆப்கானிஸ்தானின் தலைநகராக அறியப்படும் காபூல் விமான நிலையம் அருகே அடுத்தடுத்து நடத்தப்பட்ட இரண்டு தற்கொலைப்படை தாக்குதல்களில், அமெரிக்க கப்பற்படை வீரர்கள் 12 பேர் உட்பட 72 பேர் பலியாகி உள்ளதாக ஊடகங்கள் தகவல்கள் தெரிவித்து வருகின்றன. அது மட்டுமில்லாது 140-க்கும் மேற்பட்டோர் இந்த குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பலி எண்ணிக்கை மேலும் உயரவும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளன.

தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து தொடர்ந்து அங்கு இருக்க விருப்பமில்லாத மக்களும் அங்குள்ள அமெரிக்கர்களும் காபூல் விமான நிலையம் மூலம் வெளியேறி வரும் இந்த சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு அடுத்தடுத்து இரண்டு தற்கொலைப்படை தாக்குதல்களை பயங்கரவாத அமைப்புகள் மேற்கொண்டுள்ளன. இந்த தற்கொலைப்படை தாக்குதல்களை ஐ.எஸ் எனப்படும் பயங்கரவாத அமைப்பு நிகழ்த்தியுள்ளதாக அமெரிக்க அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது.

தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில் ” இத்தகைய தாக்குதலை ஏற்படுத்தியவர்களே உங்கள் நாட்களை இந்த தேதியிலிருந்து குறித்து வைத்துக்கொள்ளுங்கள், உங்களை அமெரிக்கா மன்னிக்கவும் போவதில்லை, இந்த தாக்குதலை துளியும் மறக்கவும் போவதில்லை, எங்கள் படைகளையும் பதிலடிகளையும் எதிர்கொள்ள தயாராக இருங்கள் “ என்று அறிக்கையுடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் உயிரிழந்த 12 வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அமெரிக்கா முழுவதும் இன்று அமெரிக்க கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடும்படியும் கோரிக்கை விடுத்துள்ளார்.

“ உயிரைவிட்டு உயிரைக்கொன்று குவிப்பதில் அப்படி என்ன ஆனந்தம் பெறுகிறதோ இந்த பயங்கரவாத அமைப்புகள் “

About Author