நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இன்று, மாறன் தன் தாய் ராதாவிடம் பேசி நெகிழ்ச்சியோடு ஒன்று சேர்க்கிறார். பின்னர் கத்தி மாயனை குறித்து காயத்ரியிடம் மகிழ்ச்சியை தெரிவிக்கிறார். அதுமட்டுமல்லாமல் தான் தன் தாயை எந்த அளவுக்கு பிரிந்து வாடுகிறார் என்பதையும் கூறுகிறார். இதுமட்டுமல்லாமல் காயத்ரியையும் குடும்பத்தையும் மூத்த மருமகனாக இருந்து தான் பார்த்துக் கொள்வதாக உறுதி அளிக்கிறார்.
இதற்குப்பின் மாயனும் மாறனும் பேசிக்கொண்டிருக்க மாறன் மாயனுக்கு நிறைய வாழ்க்கை தத்துவங்களை கூறுகிறார். பின்னர் மாயனை வீட்டிற்கு வருமாறு அழைக்கிறார். மாயனும் நாச்சியார் மற்றும் தன் சகோதரிகளுக்கு வாக்களித்து, வீட்டிற்குள்ளே கூட்டிவர எத்தனிக்கிறார். அந்த சமயத்தில் சாரதா ஆரத்தி எடுத்துவிட்டு மாயன் நாச்சியாரையும் உள்ளே அழைக்கிறார் என்று தெரிந்தவுடன் மிகவும் கோபப்படுகிறார். மாயன் அதிர்ச்சியாகிறார்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்