உலகிலேயே அதிக சிசிடிவி கேமராக்கள் கொண்ட நகரங்களுள் சென்னைக்கு மூன்றாம் இடம்!

போர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி உலகிலேயே அதிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தியிருக்கும் நகரங்களுள் தமிழகத்தின் சென்னை மாநகரம் மூன்றாம் இடத்தைப்பிடித்துள்ளது.

போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி உலகிலேயே அதிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தியிருக்கும் நகரங்களுள், குறைந்த பட்சம் 2.5 சதுர கிலோ மீட்டருக்குள் 1826 சிசிடிவி கேமராக்கள் பொருத்தியிருக்கும் டெல்லி முதலிடத்தையும், 1138 சிசிடிவி கேமராக்களுடன் லண்டன் இரண்டாம் இடத்திலும், 609.9 கேமராக்களுடன் சென்னை மூன்றாம் இடத்திலும் உள்ளன.

மூன்றாம் கண் என்று அழைக்கப்படும் சிசிடிவி கேமராக்கள் பெரும்பாலும் நகரத்தின் பாதுகாப்பிற்காக பொருத்தப்படுகின்றன. அந்த வகையில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு திறம்பட செயல்பட்டு நகரத்தின் அனைத்து மூலைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி நகரத்தை தீவிர கண்காணிப்பில் வைத்திருக்கும் வகையில் செய்திருக்கின்றன. தமிழகத்தின் சென்னை நகரமும் உலகளாவிய அளவில் மூன்றால் கண் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தைப்பிடித்திருப்பது தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் ஆகும்.

“ மூன்றாம் கண் கண்காணிப்பு என்பது ஒரு தனிமனிதனுக்கு மிகப்பெரிய சிறை என்றாலும் சமூகம் என்று வருகையில் அது ஒரு பாதுகாப்பு பெட்டகம், அதை அதன்கண் பயன்படுத்தும் விதத்திலேயே அதன் பண்புகளிலிருந்து வேறுபடுகிறது. பாதுகாப்பு பெட்டகமாகவே கருதி பாதுகாப்பிற்கெனவே பயன்படுத்திடுவோம் “

About Author