200 கோடி தடுப்பூசியை செலுத்தி புதிய சாதனை புரிந்திருக்கும் சீனா!

கொரோனோ முதன் முதல் கண்டறியப்பட்ட நாடான சீனாவில் கொரோனோ பரவலுக்கு எதிராக 200 கோடி தடுப்பூசிகள் உபயோகிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனோ பரவலுக்கு எதிராக உலக நாடுகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், அத்தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவும் இதற்கு விதிவிலக்கல்ல. கிட்ட தட்ட 140 கோடி இருக்கும் சீன மக்கள் தொகையினுள் 89 கோடி பேருக்கு இரண்டு தவணையாகவும் தடுப்பூசி செலுத்தியுள்ளது சீனா அரசு. அது மட்டுமில்லாது 200 கோடிக்கும் மேல் தடுப்பூசியை செலுத்தி புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது சீன அரசு.

இந்தியாவை எடுத்துக்கொண்டால் ஒட்டு மொத்த மக்கள் தொகை என்பது இங்கு 130 கோடியை தாண்டி இருக்கும். ஆனாலும் ஒட்டு மொத்த மக்கள் தொகையினுள் இங்கு வெறும் 10.2 சதவிகிதம் மக்களே இரண்டு தவணையாகவும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். அதாவது 13 கோடி பேர் மட்டுமே பரவலுக்கு எதிராக இரண்டு தவணையும் செலுத்திக்கொண்டுள்ளனர். அதுவே சீனாவை எடுத்துக்கொண்டால் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 63.5 சதவிகிதம் பேர் இரண்டு தவணையும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

“ குறைந்த பட்சம் 65 சதவிகிதம் கொரோனோவிற்கு எதிரான நோய் தடுப்பாற்றலை பெற வேண்டுமெனில் இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். தற்போது இருக்கும் இந்த சூழல் எப்போது வேண்டுமானாலும் தீவிரமெடுக்கும் என்பதில் ஐயமில்லை. உங்களையோ உங்களைச்சார்ந்தவர்களையோ கொரோனோ என்னும் பேரிடரிலிருந்து நீங்கள் மீட்க விரும்பினால் இரண்டு தவணையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் “

About Author