விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைசி தம்பியான கண்ணனுக்கு ஐஸ்வர்யாவுடன் நடந்த திருமணத்திற்குப் பிறகு ஏகப்பட்ட விறுவிறுப்பான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இதில் இன்று புதிதாக அடுத்த வாரம் என்று காட்டப்படும் ப்ரோமோவில், சகோதரர்களின் தாயார் லட்சுமி அம்மா சுயநினைவின்றி படுத்து இருக்கிறார். அனைவரும் அதிர்ச்சியாகி அவரை சூழ்ந்து உள்ளனர்.
ஏற்கனவே ரசிகர்கள் சந்தேகப்பட்டது போல ஒருவேளை லட்சுமி அம்மாவின் கதாபாத்திரம் முடிவுக்கு வருகிறதா? இதனால் அண்ணன் தம்பிகளுக்கு இடையே இன்னும் பிரச்சனை வந்து, கண்ணனை வீட்டை வைத்துவிட்டு மொத்தமாக ஒதுக்கி வைக்கப் போகிறார்களா என பல கேள்விகள் எழுகின்றன.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்